Sunday, November 17, 2013

சச்சினுக்கு பாரத ரத்னா - என் நிலையில் மாற்றமில்லை

தேசம்  முழுவதும் ஒரு பரவச நிலையில் சச்சின் காய்ச்சலில் தவிக்கும்
வேளையில் அவருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்தது முறையா என்று
யோசிக்கவே யாரும் தயாராக இல்லை. இது பற்றி நான் இரண்டு
ஆண்டுகள் முன்பு எழுதியதன் இணைப்பை இங்கே தந்துள்ளேன்.

அவசியம்  படிக்கவும்

அப்போது முன்வைக்கப்பட்ட விமர்சனமும் மதிப்பீடும் அப்படியே
உள்ளது. சொல்லப்போனால் இன்னும் மோசமாகி உள்ளது.  உலகமய
உலகில் பன்னாட்டுக் கம்பெனிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு
விளம்பர தூதராக இன்னும் வேகமாக உலா வருவதற்கு இந்த
பட்டம் உதவப் போகிறது.

பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர் குறைந்த பட்சம் விளம்பரப்
படங்களில் தோன்றுவதை நிறுத்தினால் அவரை நான் நிச்சயம்
பாராட்டுவேன்.

 

2 comments:

  1. உஙக கோபம் நியாயமானது தான். கோடி கோடியா சம்பாதிச்சாலும் உஙக உண்டியல்ல பத்து பைசா போட அழுறாங்களே.

    ReplyDelete
  2. கோடீஸ்வரன்களை நம்புவதாக இருந்தால் நாங்கள் ஏன் உண்டியல் குலுக்கப் போகின்றோம் என்பது கூட புரியாமல் வக்கிர புத்தியோடு பின்னூட்டம் போட வந்து விட்டீர்கள். உழைப்பாளி மக்களிடம்
    உண்டியல் குலுக்குவது எங்களுக்கு பெருமைதான். அவர்கள் தரும்
    ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாயில் இயக்கம் நடத்துவதால்தான்
    தலை நிமிர்ந்து நடக்கிறோம். எந்த கோடீஸ்வரனின் எலும்புத் துண்டும் எங்களுக்கு அவசியமில்லை. நீங்கள் வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள்

    ReplyDelete