Tuesday, November 12, 2013

விஜயகாந்த் என்ன மட்டம்? மோடி என்ன ஒஸ்தி?
ஆனாலும் இந்த பத்திரிக்கைங்க, தொலைக்காட்சிங்க, பேஸ்புக்கர்கள், ப்ளாக்கர்கள் எல்லாம் ரொம்ப மோசம். ஒருதலைப் பட்சமா நடக்கிறாங்க.

கேப்டன் ஏதோ ட்ங் சிலிப்பாகி மஞ்சுளா இறந்து போன போது “அவர்களின் குடும்பத்தாருக்கு நன்றி “ என்று சொன்ன போதும் புரட்டி எடுத்தாங்க. அதே போல “எனக்கு தெரிஞ்ச இங்கிலிஷில துமாரா நாம் க்யாஹே” என்று சொன்ன போதும் துவைத்து காய வைத்து தொங்க விட்டாங்க. கங்னம் டேன்ஸை விட யூடூயுபில மிகப் பெரிய ஹிட்டா மாத்தினாங்க.

ஆனா நரேந்திர மோடியோ வரிசையா தப்பு தப்பாவா பேசிக்கிட்டு இருக்காரு.

வேதாரண்யத்தில ராஜாஜி உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை தாங்கினாரு. ஆனா மோடியோ வ.உ.சி என்று மாத்தி பேசினாரு. இது திருச்சியில.

குப்தர் வம்சத்தை பற்றி நினைத்தால் சந்திர குப்தர் எழுதிய ராஜ நீதிதான் நினைவுக்கு வரும்னு மோடி வேணா பேசலாம். ஆனா சந்திர குப்தரோ மௌர்ய வம்சத்தை சேர்ந்தவரு.

அலெக்சாண்டர பிகாரிங்க தக்சீலாவுல தோற்கடிச்சாங்கனு ஒரே போடா போட்டாரு மோடி. ஆனா பாவம் அலெக்சாண்டரால கங்கையை கடந்தே வர முடியல. மோடி சொன்ன தக்சீலா என்னமோ பாகிஸ்தான்லதான் இருக்கு.

இது கூட பரவாயில்லை. குஜராத்தை சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி தான் முதன் முதலா இங்கிலாந்துலயே பிரிட்டிஷ் அரசுக்கு எதிரா லண்டனில இந்தியா ஹவுஸ் திறந்தாரு என்று பேசினாரு மோடி. என்ன கொடுமைனா சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். மோடி இருக்கிற பாரதீய ஜனதா கட்சி முன்னாடி ஜனசங்கம் என்ற பெயரில இருந்தது இல்ல, அந்த கட்சியை ஏற்படுத்தினதே அவருதான். குஜாராத் காரரு பேரு ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா.

தன்னோட கட்சியோட ஸ்தாபகத் தலைவர் பெயரும் தெரியல, தன்னோட மாநிலத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பேரு
ஷ்யாமாஜி கிருஷ்ண வர்மா என்பதும்  தெரியல.

போக போக இன்னும் என்னவெல்லாம் தப்பு தப்பா பேசப் போறாரோ? ஹிந்து பத்திரிக்கை கூட நல்லாவே கார்ட்டூன் போட்டிருக்காங்க.

ஏம்பா விஜயகாந்த மட்டும் தடுமாறராரு, வாய் கொழராறு, நிதானத்துல இல்லை அப்டீனுல்லாம் நக்கலடிக்கிறீங்க, மோடியை மட்டும் எதுவுமே சொல்ல மாட்டீங்கறீங்க?

அப்படி என்ன விஜயகாந்த் மட்டம்? மோடி ஒஸ்தி?

9 comments:

 1. True . people are unfair to captain.
  Any one can be a prime minister or chief minister .Because everything is run by officials
  in the back ground. credit or bad name goes to politician.

  ReplyDelete
 2. ஒன்று நிச்சயம்.. மோடி மேனியா உங்களை பிடித்து ஆட்டுகிறது! என்னை பொருத்தவரை.. காங்கிரஸ் செய்யாத கேட்டது ஒன்றும் மோடி செய்துவிடவில்லை.. ஆனால் காங்கிரஸ் செய்ய முடியாத நல்லவை செய்திருக்கிறார். அந்த தராசில் எடை போட்டால் மோடி பரவாயில்லை!

  ReplyDelete
 3. You bloody idiot ,do not compare the great man Modi with useless film actor v.kanth.

  ReplyDelete
 4. மோடியை ஒரு பூதாகாரமாக சர்வ வல்லமை படைத்த கடவுளாக காட்டுகிறார்கள்.ஆர்.எஸ் .எஸ். வீடு வீடாக பிரசாரம் செய்கிறார்கள். நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது போல் சென்று, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசி மோடியை கொண்டு வரலாம் என்கிறார்கள். படித்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்களும் இதை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்

  ReplyDelete
 5. திரு பந்து, மோடி மேனியா மக்களுக்கு பிடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறோம். இன்னும் எழுதுவோம். மோடி செய்ததாக சொல்லப்படும் நல்லவைகள் எல்லாம் வெறும் பொய்த்தகவல்கள் என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. அவர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. முதலாளிகளுக்கு செய்துள்ளார் என்பது உண்மை

  ReplyDelete
 6. Mr Anonymous, Are you such an idiot? I have not compared Modi with vijayakanth. I said Modi is worse than vijayakanth. Since you are also a fool like your mentor Modi, You are not able to understand.

  ReplyDelete
 7. I like Modi. Modi is our PM.

  ReplyDelete
 8. மொடி மட்டும் 2000 பெரை கொலை செயவில்லை என்ட்ரால் இப்போலுது
  advani தான் prime minister வேட்பால்ர்

  ReplyDelete
 9. Mr Anonymous, I Hate Modi, He Can Not Be our PM

  ReplyDelete