மழைக்கு மட்டுமா மனதில்லை?
மரங்களை வெட்டி
மலையை மூளியாக்கிய
மாமனிதர்களுக்கும்
மழை வேண்டும்
என்ற மனமில்லை.
புதிதாய் பயிர்
துளிர்க்கும் முன்னே
தீக்கிரையாக்கும்
மூடர்களுக்கும் கூட
மழை வேண்டும்
என்ற மனமில்லை.
ஆறு வறண்டு கிடந்தாலும்,
மணல் கூட இல்லாத
பாலையாய் பாலாறு
காட்சி தந்தாலும்,
ஆயிரம் அடிக்கும் கீழே
தண்ணீர் ஒளிந்து கொள்ள,
சாலைகள் எல்லாம்
காலிக்குடங்களின்
முற்றுகைக் களமாக
மாறிப் போனாலும் கூட
ஆட்சியாளர்களுக்கும்
அதிகாரத்தை
ருசிப்போர்க்கும்
மரம் வேண்டும்,
மழை வேண்டும்
என்ற மனமில்லை.
தண்ணீர் வணிகர்கள்
பிளாஸ்டிக் கேன்களையும்
பெரிய லாரிகளையும்
நிரப்ப மட்டும்
ரகசியமாக பெய்கிறதோ
மழை?
No comments:
Post a Comment