சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை அகற்றுவது
குறித்த சர்ச்சை மேலோங்கி வருகிறது. கலைஞரால்
நிறுவப்பட்டது என்ற காரணத்திற்காக அதனை அகற்ற
அரசு முயற்சித்தால் அது வன்மையான கண்டனத்திற்கு
உரியது.
ஆனால் நான் வேறொரு கோணத்திலும் யோசிக்கிறேன்.
மூன்று மாதங்களுக்கு முந்தைய ஒரு சென்னைப் பயணத்தின்
போது கடற்கரைச் சாலையின் வழியே வேனில் செல்லும்
போது ஜன்னலோரம் அமர்ந்திருந்த நான் நடிகர் திலகத்தின்
சிலையை ஆர்வத்தில் எட்டிப் பார்த்தேன். பார்த்ததும்
நொந்து போனேன். ஏனென்றால் அவர் தலையில் ஒரு
காகம் அமர்ந்திருந்தது.
இப்படிப்பட்ட நிலைமை அவசியமா என்று அப்போதே
தோன்றியது.
சிவாஜி கணேசன் சிலை என்று மட்டுமல்ல, பெரும்பாலும்
சாலையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளின்
கதியும் இதுதான்.
கழுதைக்கு கற்பூர வாசனையும் தெரியாது.
காக்காய்க்கும் அது தலைவர் சிலை என்று புரியாது.
வேறு மாற்று ஏற்பாடு ஏதாவது யோசிக்கலாமே,
எல்லா சிலைகளுக்குமே....
கலைஞரால் வைக்கபட்ட சிலை என்ற காரணத்திற்காக அதனை அகற்ற அரசு முயற்சித்தால் அது கண்டனத்திற்கு உரியது.மற்றும்படி இந்த சிலை வைக்கும் அற்ப ஆசைகளை தமிழகம் விட்டொழிப்பது நல்லது. ஒரு பைசா பயனற்றது.
ReplyDeleteஎன்னைக் கேட்டால் யாருக்குமே ரோட்டின் நடுவில் சிலை வைக்க கூடாது. இதற்கென்று ஒரு முற்றம் அமைத்து அங்கு அனைவரது சிலைகளையும் அமைக்கலாம்
ReplyDeleteஇந்த சிலை வைக்கும் பழக்கமே கடவுள், கோயில் போன்ற இத்யாதிகளின் எச்சம் என்பதே என் கருத்து
வரும் தலைமுறைக்கு வழிகாட்டிகளை அறிமுகப்படுத்துவது அவசியம் . அதற்கு சிலைகள் தேவைதான் . ஆனால் அதை பாதுகாப்பது மிக முக்கியம் . அது தனி நபராக இருந்தாலும் அரசாக இருந்தாலும் !
ReplyDeleteசென்னையில் சோபன் பாபுவுக்கு சிலை இருப்பது தெரியுமா sir
ReplyDeleteஅப்படியா தோழர்? எனக்கு தெரியாது. "அம்மா"வுக்கு தெரியுமா?
ReplyDelete//வரும் தலைமுறைக்கு வழிகாட்டிகளை அறிமுகப்படுத்துவது அவசியம் . அதற்கு சிலைகள் தேவைதான் . //
ReplyDeleteதிரு கோபி g, சிலைகளை காட்டி தான் வழிகாட்டிகளை அறிமுகபடுத்தலாம் என்கிறீங்க. ம்.... காந்தியோ ,அம்பேத்கரோ கூட எனக்கு சிலை மூலம் அறிமுகமாகவில்லை.சிவாஜி கணேசன் ஒரு நடிகர் தானே அவர் எப்படி வழிகாட்டி.
தமிழகத்தில் சிலை இரசிகர்கள் நிறைய இருப்பாதால் நண்பர் கரிகாலனின் ஆலோசனை படி சிலை முற்றம் ஒன்று அமைத்து அங்கே மட்டுமே அனைவரது சிலைகளையும் வைக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யலாம்.
முதலில் அங்கு சிவாஜி சிலையை வைத்ததே தவறு. சிலை வைக்கும் அளவிற்கு சிவாஜி சமுதாயத்திற்கு என்ன செய்தார்? போக்குவரத்து வசதிக்காக சிலையை அகற்றுவது நல்ல முடிவு தான். இனி வரும் காலத்தில் நடிகரின் பெயரில் சென்னை நகர சாலைகளுக்கு பெயர்களும், சிலைகளும் நிறுவப்படக்கூடும். ஆகவே இது சரியான முடிவு. நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும் போது சிவாஜி சிலை அகற்றும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், சர்ச்சையாக்குவதும் தேவையற்றது. எதை வைத்து சிவாஜிக்கு சிலை வைத்தார்கள்... முதலில் அதை சொல்லுங்கள்.
ReplyDeleteஎல்லோரும் நண்பருக்கும் சிலை வைக்க ஆரம்பித்து விட்டால், நாட்டில் எல்லோரும் சிலைக்கு கீழே தான் குடியிருக்க வேண்டும்.
ReplyDeleteTamilmanam +1
ReplyDelete