Thursday, November 7, 2013

பாரதி பாராட்டிய..........



 
அடிமை விலங்கை
அறுத்தெறிந்து
பொன்னுலகம் நோக்கி
புறப்பட்ட பயணத்தின்
தொடக்க நாள்.



கொடுங்கோன்மைஆட்சிக்கு
முடிவு கட்டி
தொழிலாளி ஆட்சிக்கு
பூபாளம் பாடியது
ரஷ்யப் புரட்சி.  


பாரதி பாராட்டிய,
பாரை மாற்றியமைத்த,
புரட்சித் திருநாள்.

எல்லோரும் எல்லாமும்
பெறலாம் என்பதை
சாதித்த சோவியத்தின்
பிறந்த நாள்.

இழப்பதற்கு ஏதுமில்லை
என்ற நிலையில்
இன்றும் நாம்.

அனைத்தையும் பறிக்கிற
ஆட்சியாளர்கள்.
அனைவரையும் பிரிக்கின்ற
பாதகர்கள்.

லத்தீன் அமெரிக்காவில்
மட்டும்தான் மலருமா
சிவப்பு ரோஜாக்கள்?

உண்மையை உரக்கச் சொல்லி
நீயும் நானும் எல்லோரும்
கரம் கோர்த்து
களம் கண்டால்
இந்திய பூமியிலும்
புரட்சி மலர்கள் பூப்பூக்கும்.

No comments:

Post a Comment