ஹரியானா மாநிலம் மானெசரில் மாருதி நிறுவனத்தில் நடைபெற்ற
பிரச்சினையால் சிறையிலடைக்கப்பட்டு இன்னமும் ஜாமீன் கூட
கிடைக்காமல் தவிக்கும் 146 தொழிலாளர்களில் ஒருவரான
ஜிதேந்தர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் கீழே
தரப்பட்டுள்ளது.
தொழிற்சங்க இயக்கத்திற்கு எதிரானவர்களும், முதலாளித்துவ
சுரண்டலை ஊக்குவிப்பவர்களும் போராட்டங்கள் அவசியமில்லை
என்று கருதுபவர்களும் வேறு வேலை இருந்தால் பாருங்கள்.
இந்தக் கடிதம் உங்களுக்கு இல்லை. முதலாளித்துவ லாபத்தின்
கோர முகத்தை அம்பலப்படுத்தி உழைப்பாளி மக்களுடைய
உரிமைகளுக்காகவும் இந்த தேசம் ஒரு சில முதலாளிகளுக்கு
மட்டுமானதில்லை, சாமானிய உழைப்பாளி மக்களுக்கும்
சொந்தமானது என்ற உணர்வோடு, அந்த உரிமையை
வென்றெடுக்க தொடர்ந்து போராட்ட களத்தில் நடை போடும்
தொழிலாளிகளுக்கு உத்வேகம் தருவது.
எங்களின் கண்ணீரையும் கோபத்தையும் கேள்விகளையும்
புரிந்து கொள்ள முடியாதவர்கள் இக்கடிதத்தை படிக்கவோ,
அதன் மீது கருத்து சொல்லவோ தேவையில்லை.
ஏனென்றால் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாவிட்டாலும்
பார்த்துக் கொண்டிருக்கிற வேலை பறி போனாலும் அது பற்றி
கவலைப்படாமல், அது ஏன் நிகழ்கிறது என்று ஆராய்கிற
இடதுசாரிகளை ஏளனம் செய்கிற கூட்டத்திற்கு பதினைந்து
மாதங்களாக சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வதைபடுகின்ற
தொழிலாளிகளின் வலி புரியாது.
மனசாட்சி உள்ளவர்கள் கடிதத்தை படியுங்கள்.
படிக்கக் கூடாத கடிதம்
ஜிதேந்தர்
அன்புள்ள
பிரீதம்,எனது அன்பு முத்தங்கள். நேற்றோடு 79 முறை சிறையில் கம்பிகளுக்கு
அப்பால் இருந்து என்னை பார்த்துச் சென்றாய். இப்போது எந்த நாளையும் விட
நேற்றைய தினம் உனது வருகை என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.
நேற்றோடு நமக்கு திருமணம் நடந்து 4 ஆண்டு கள் ஆகிவிட்டன. நமது திருமண நாளை
நினைவுபடுத்தாமலேயே என்னை நீ பார்த்துச் சென்றாய். எனக்கு நினைவு இருந்த
போதும் அதை உனக்கு சொல்லுகிற தைரியம் இல்லாத தால் நானும் உன்னிடம்
பேசவில்லை. இனி மேல் அடிக்கடி நீ என்னை சிறையில் வந்து சந் திக்க வேண்டாம்
என்று கேட்டுக் கொள்கிறேன்.சிறைக்கு வந்த சில வாரங்கள், தினந்தோறும் நீயோ,
நமது உறவினர்களோ என்னைப் பார்க்க வரவேண்டும் என்று நான் ஏங்கியிருக்கிறேன்.
சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரைச் சொல்லி என்னை சந்திக்க
வேண்டுமென்று அவர்களிடம் வேண்டிக் கொள்ள உனக்குக் கூறி யிருந்தேன்.
உனக்கு நினைவிருக்கிறதா, வாரம் இருமுறை சந்திப்பதற்கு வாய்ப்பிருந்தும் போன ஆண்டின் ஒரு வாரத்தில் ஒரு நாள் நீ வராத போது நான் மிகவும் துடித்துப் போனேன். அடுத்த முறை சந்தித்த போது நான் அழுவதைப் பார்த்து என்னிடம் ஏன் என்று கேட்டாய்? நான் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை. அம்மா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டிருந்ததையும் அவர்களோடு நீ இருந்ததையும் நீ எனக்குச் சொல்லவில்லை. ஆனால், பின்னர் வழக்கறிஞர் மூலம் அதை நான் தெரிந்து கொண் டேன். ஆனால், இப்போது நான் சிறையிலிருந்து வெளிவரும் வரை என்னைப் பார்க்க வராமல் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது. என்னைப் போல இன்னும் 146 பேர் என் னோடு பணிபுரிந்தவர்கள் ஒரு வருடத்திற்கு மேலாக இந்த சிறைச் சாலைக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். அவர்களில் பலரது அம்மா வோ, மனைவியோ அவர்களை வாரா வாரம் சந்திப்பதில்லை.
நிரந்தர வருமானமற்று போன தால் குழந்தைகளை படிக்க வைக்க, பெற் றோரை மருத்துவரிடம் கவனிக்க என்று எத்த னையோ செலவுகளுக்காக வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் சிறைச் சாலைக்கு வருவது என்பது ஒரு நாள் உணவை இழக்க வேண்டும் என்பதோடு இன்னொரு நாள் உணவுக்கான பணத்தை பயணத்தில் இழக்க வேண்டியிருக்கிறது.சிறையில் இருப்பவர்களுக்கு வெளியிலிருப் பவர்கள் அடிக்கடி பார்த்துவிட்டு செல்வது ஒரு மிகப்பெரிய ஆடம்பரம். என்னோடு வேலை செய்து இப்போது சிறையில் இருக்கிற இதர 146 பேரில் பலருக்கும் உறவினர்களை பார்க்கும் இந்த வாய்ப்பு இல்லாத போது அந்த ஆடம்பரத்தை நான் அனுபவிப்பது ஒரு அந்நியப்பட்டுப் போன உணர்வை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் என்னைப்போலவே 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர். சிலருக்கு திரு மணமாகவில்லை. பலருக்கும் கைக்குழந் தைகள் இருக்கிறார்கள்.உனக்கு நினைவிருக்கும், சிறைச்சாலைக்கு வந்த சில நாட்களில் நீ என்னைப் பார்க்க வந்த போது மிகப்பெரிய தைரியத்தோடும் தெம்போடும் உனக்கு ஆறுதல் சொன்னேன். விரைவில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவேன். என் மீது போடப்பட்ட வழக்குகள் பொய் என்பதை நிரூபிப் பேன்.
பொய் வழக்குப் போட்டவர்களை சட்டத் தின் முன்னாள் நிறுத்துவேன் என்று உன்னிடம் கூறியிருந்தேன். நான் சிறைக்கு வரும் முன்பாக அந்த தொழிற்சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. அவர்கள் மீது எனக்கு வெறுப்பு இருந்த தும் கிடையாது. ஆனால், இன்று அந்த தொழிற் சாலையின் வாயிலுக்கு முன்னாள் ஓங்கி வளர்ந்த ஒரு கம்பத்தை நட்டு அதன் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் சங்கத்தின் கொடியை பறக்கவிட்டு தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது போல தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சாலைக்கு செல்லும் முன் அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று கனவு காண ஆரம் பித்திருக்கிறேன். இப்போது என்னுடைய ஒரே கனவாக அது மட்டுமே இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் (நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நிர் வாகம் என்னை அவர்கள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டது) மனித வளத்துறை பொது மேலாளர் அவானிஷ் தேவ் இறந்து போன அன்றைய தினத்தில் எத்தனை பதற்றத்தோடு இருந்தேன் என்பதை நீ அறிவாய்.
எனது சொந்த சகோதரனை பறிகொடுத்தது போன்ற உணர்வில் நான் இருந்தேன்.அப்போது சங்கத் தலைவர்களாக இருந்தவர் கள் கூட அவரைப் பற்றி நல்லவிதமாகவே பேசி னார்கள். அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவான வர் என்பதால் நிர்வாகம் கூட அவர் மீது கோப மாக இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இப்போது அவருடைய பிரதேப் பரிசோதனை அறிக்கை மர்ம முடிச்சுகளால் சூழப்பட்டிருக்கிறது. அவரை அடித்து கொன்று எரித்ததாக எல்லா பத்திரிகை களும் செய்திகள் வெளியிட்டன. நானும் கூட உண்மை என்று நம்பியிருந்தேன். இப்போது காலில் சில காயங்களைத் தவிர வேறு காயங்கள் உடம்பில் இல்லை என்றும் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்து போனார் என்றும் வெளிப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளைப் பற்றி எனக்குத் தெரியும். தொழில் தகராறுக்காக அவர்கள் யாரையும் கொல்லத் துணியமாட் டார்கள். அப்படி எல்லாம் நடந்தால் இந்த நிறு வனத்தில் எத்தனையோ கொலைகள் நடந் திருக்க வேண்டும். இந்த நல்ல மனிதரை கொல் வதற்கு நிச்சயம் தொழிலாளிகள் துணிந்திருக்க மாட்டார்கள்.நம் திருமணம் முடிந்து ஒரு வார காலம் முடிந்த பிறகு உனது வீட்டிற்கு விருந்திற்காக வந் திருந்தேன். உனது உறவுக்காரர்களை எல்லாம் அழைத்து வந்து உனது அப்பா பெருமை பொங்க எனது மருமகன் மாருதி சுசுகியில் வேலை செய்கிறார். அது ஒரு ஜப்பான் நிறுவனம். நல்ல சம்பளம். கவுரமான வேலை என்று குறிப்பிட்டார்.அப்போது, உங்கள் குடும்ப உறுப்பினர் களிடமும் உறவினர்களிடமும் ஒரு பெருமிதம் தொற்றிக் கொண்டதை உணர முடிந்தது. அடுத்த நாள் நான் கடைவீதிக்குச் சென்றபோது சில இளைஞர்கள் தாங்கள் மாருதி சுசுகி நிறு வனத்தில் பணிக்குச் சேர முடியுமா? என்னால் அதற்கு உதவ முடியுமா என்றெல்லாம் கேட் டார்கள்.
சில சிறார்கள் கூட, அந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்றால் என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் கூட கேட் டார்கள். நான் அவற்றிற்கெல்லாம் ஏதோ பதில் சொல்லிவிட்டு வந்தேன்.நிறுவனத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். 48 நிமிடத்தில் ஒரு கார் உற்பத்தியாகி வெளியே வந்துவிடும். எனவே, சில நொடி களைக் கூட விட்டுக் கொடுப்பதற்கு நிர்வாகம் அனுமதிக்காது. ஆனால் பிரீதம், ஒரு மனிதன் டீ குடிக்கக் கூட உட்கார முடியாது.ஆனால் கூட எங்கள் மேலதிகாரிகள் டீ குடிக்கிற இடத்தில் வேலை சம்பந்தமாக ஆணைகளை பிறப்பிப்பார்கள். அது ஒன்றும் புதிய விசயம் கிடையாது, எங்களுக்குப் பழகிப் போன ஒன்றுதான்.துரதிர்ஷ்டமான அந்த ஜூலை 17 ஆம் தேதி ஒரு தொழிலாளி பாவம் அவன், என்ன சிரமத்தில் இருந்தானோ அவனிடமிருந்த மனிதன் சற்று தலையைத் தூக்கி மேலதிகாரியிடம் இந்த 7 நிமிடம் டீ குடிப்பதற்கான எங்கள் நேரம். இப் போது எதுவும் சொல்லாதீர்கள் என்று கூறியிருக் கிறான். உலகம் முழுவதும் பெருமிதத்தோடு தங்கள் கார்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் சூப்பரவைசரிடம் அப்படியெல்லாம் பேசக் கூடாது என்கிற நியதி பாவம் அந்த தொழிலாளிக்கு தெரிந்திருக்க வில்லை. அப்படி கேள்வி கேட்டதற்காக அந்த தொழிலாளியை சாதியைச் சொல்லி அந்த சூப்பிர வைசர் திட்டிவிட்டார். இது அனைத்து தொழி லாளிகளின் முன்பு நடந்து, அனைத்து தொழி லாளிகளும் அவமான உணர்வை அனுபவித் தார்கள். இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது சம்பந்தப்பட்ட சூப்பிரவைசர் மீது நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவமானப்பட்ட தொழிலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதை யொட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பின்பு இதுவரை நாங்கள் சிறையிலிருக்கிறோம்.ஆகஸ்ட் 1 ஆம் தேதி 2012 இல் போலீஸ் 10 பேரை கைது செய்தது. அவர்களில் சங்கத் தலைவர்களும் அடங்குவர். அவர்களை போலீஸ் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய வில்லை. போலீஸ் தேடுகிறது என்று தெரிந்ததும் அவர்களாகவே காவல்நிலையத்திற்கு போனார்கள். பிரீதம், காக்கி உடையைப் போட்ட பிறகு காவல்துறையினர் மனித குணங்களை கழற்றி வைத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சரணடைந்த அந்த தொழிலாளிகளை காவல் துறையினர் வாயிலும் நெஞ்சிலும் பூட்ஸ் கால் களால் மிதித்ததையும், அது அவர்களின் கடமை யைப் போல செய்ததையும் என் வாழ்நாளில் அதை மறக்கமாட்டேன்.அதன் பிறகு நானும் கைது செய்யப்பட்டேன் இப்போது 147 பேரில் காசநோயால் பாதிக்கப் பட்ட ஒருவரைத் தவிர மீதி அனைவரும் சிறைக்குள் தான் இருக்கிறோம். நான் கைது செய்யப்பட்ட போது சங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்ட மற்றவர் களும் நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று கேட்டார்கள். ஏனென்றால், அவர்களுக் குத் தெரியும் நான் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் அல்ல. தொழிற்சங்கத் தலை வர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவே நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். சிறைக்குள் வந்த பல நாட்களில் எனக்கு உறக்கமே பிடித்ததில்லை. நான் சிறைக்குள் வந்ததை விட, இதர 146 பேருடன் எந்த வகை யிலும் தொடர்பில்லாத நான் சிறையிலடைக்கப் பட்டதை அவமானமாக கருதினேன். ஆனால், பிரீதம் இப்போது இவர்களோடு இருப்பதற்காக, அவர்களின் துயரங்களில் பங்கெடுத்ததற்காக, அவர்களின் ஒருவனாக நிர்வாகமும் போலீசும் சொல்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
இந்த ஒரு காரணத்திற்காகத் தான் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வார இருமுறை உறவினர்கள் சந்திப்பு என்கிற ஆடம்பரத்தை நான் அனுபவிக் கக் கூடாது என்பதற்காகவே நீ இனிமேல் என்னைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பிரீதம், நேற்று வரை நாங்கள் சிறைக்கு வந்து 15 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இன்று வரையிலும் எங்களுக்கு பெயில் கிடைக்க வில்லை. நம் நாட்டில் சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்பதை பெருமிதத்தோடு பிரகட னப்படுத்தி நமது நாட்டின் நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது நாட்டின் தாலுகா முதல் தலைநகரம் வரை பல படிநிலை நீதிமன்றங்களிலும் தினந்தோறும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நமது நீதி வழங்கும் முறை, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்திக் கொண்டிருக் கின்றது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள் கூட மேல்முறையீடு செய்து இடைக்காலத்தில் பெயிலில் வெளியே வரு கிறார்கள். ஆனால், 147 பேர் 15 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறைச் சாலைக்குள்ளே இருக்கிறோம். அன்று ஒரு சகோதரி தன்னுடைய அண்ணனை பார்க்க வந்திருந்த போது நீதிபதி களுக்குத் தெரியாதா, 147 பேர் சேர்ந்து ஒரு மனி தனைக் கொண்டிருப்பார்களா என்றெல்லாம் கேள்வி கேட்டார். இதற்கு எனக்கு விடை தெரியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்படுவதற்கு நமது சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு நமது அரசியல் சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. இப்போதும் கூட அதன் மீதான நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிடவில்லை. அரசியல் அதிகாரத்தி லிருப்போர் அவ்வப்போது சட்டம் தன் கடமை யைச் செய்யும் என்று முடங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பிரீதம், மாருதி சுசுகி தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டமட்டில் சட்டம் தன் கடமையைச் செய்திருந்தால், இந்த நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். தொழிலாளர்கள் விசயத்தில் கடமையைச் செய்யாத சட்டம், மாருதி சுசுகி நிறுவனத்திற்காக 147 குடும்பங் களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக் கிறது. இது அவானிஷ் தேவ் இன் கொலைக்காக இத்தனை கடுமையாக நடந்து கொள்வதாக நான் நினைக்கவில்லை.
மாருதி சுசுகி நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கான சட்டப்படியான உரிமை யைக் கோரியதற்காகவும் சங்கம் வைக்க முயற் சித்ததற்காகவும் கொடுக்கப்பட்ட தண்டனை. இந்தியாவில் செயல்படும் எந்த ஒரு பன் னாட்டு நிறுவனத்திடமும் தொழிற்சங்கம் வைப்ப தற்கு எவனும் துணியக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை. இந்தியாவில் இருக்கக் கூடிய அந்நிய தூதரங்கள் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி செயல்படும். ஆனால், இந்தியாவில் செயல் படும் எந்த நாட்டு நிறுவனமும் எந்த நாட்டு சட்டங்களையும் மதிக்காது.நம்முடைய அரசியல் சட்டம் முடமாக்கப் பட்டிருக்கிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் வீடு, மனைவி, மக்கள், சுகம், செல்வம் அனைத் தையும் இழந்து நம் முன்னோர்கள் பெற்ற சுதந் திரம், அந்நிய நிறுவனங்களிடம் செயலற்று நிற் பதைப் பார்க்கிற போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அந்த பிரகடனம் கண் கள் பிடுங்கப்பட்டு, செவிப்பறைகள் கிழிக்கப் பட்டு, குரல்வளை நெறிக்கப்பட்டு, தேகம் எங்கும் குருதி வழிய குற்றுயிராய் கிடப்பதை நான் உணர்கிறேன்.பிரீதம், இப்போது என் மனதில் ஒரே ஒரு நோக்கத்தைத்தான் பிரதானமாக வைத்திருக் கிறேன். நேற்று உனக்குப் பின்பு வேறொருவரை பார்க்க வந்திருந்த ஒருத்தர் சொன்னார், மாருதி சுசுகி நிறுவனத்தின் வாயில் முன்பாக பறந்து கொண்டிருக்கும் சங்கத்தின் கொடி அழுக் கடைந்து, கந்தலாகி படபடத்துக் கொண்டிருப்ப தாகக் கூறினார். அதை சொல்கிறபோது நாடாளு மன்றமும் சட்டமன்றங்களும் நீதிமன்றங்களும் குற்றுயிரும் குலையிருமாய் துடித்துக் கொண் டிருக்கும் ஒரு மனிதனை ஏதோ ஒரு விசுவாசத் தால் ஏதோ ஒரு பயத்தால் ஏதோ ஒரு நிர்ப்பந்தத் தால் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.ஒரு சங்கம் வைக்க முயற்சித்ததற்காக நாங்கள் 146 பேர் சிறையிலிருப்பது மட்டுமல்ல, 3200 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நிரந்தரத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, அப்ரண்டிஸ் என எல்லா தொழி லாளிகளும் அடக்கம். இவர்களுடைய எல்லா குடும்பங்களும் தெருவில் தான் நின்று கொண் டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறதாம்.
ஒருவேளை நாங்கள் 147 பேரும் கொலைக் குற்றத்திற்காக உள்ளே இருக் கிறோம் என்றால் இந்த 3200 பேரும் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்ததற்காக. எனவே, இது அவானிஷ் தேவ் கொல்லப்பட்டதற்கான தண்ட னை அல்ல. தொழிற்சங்கம் அமைக்க முற்பட்ட தற்கான எச்சரிக்கை.பிரீதம், எனக்கு ஒரு கனவிருக்கிறது. நான் வெளியே வருவேன். நாடாளுமன்றத்தாலும், சட்டமன்றத்தாலும் நீதிமன்றங்களாலும் கை விடப்பட்ட அழுக்கடைந்து கிழிந்து படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்வேன். தேசியக் கொடியை வணங்குவதுபோல் தொழிலாளிகள் தங்கள் சங்கக் கொடியை பெருமிதத்தோடு வணங்கச் செய்வதற்கான பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.பிரீதம், கிழித்தெறியப்பட்டு, கீழே கண் டெடுக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் அந்தப் பக்கத்தை பத்திரமாக வைக்கிறேன். அதை, அதன் ஆன்மாவை பாதுகாக்கும் முயற்சி யில் இதர தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நான் போராட வருவேன். முன்பிருந் தது போன்ற குருட்டுத் தனமான பக்தியின் அடிப் படையில் அல்ல. ஒரு அரசியல் சட்டம் தன் நாட் டின் அத்தனைக் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற உண்மையான அர்த்தத்தில்.என்னைப் போன்று கணவனையோ, மகனையோ, தந்தையையோ, சிறையில் கடந்த ஓராண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கிற எல்லோருக்கும் சொல், நிச்சயமாக ஒரு நாள் நமது நியாயங்களை நமது அரசியல் சட்டம் உத் தரவாதப்படுத்தும். ஒருவேளை அது இயலாமல் போனால், புதியதொரு அரசியல் சட்டத்தை இந்தியாவின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற சட்டத்தை நாம் உருவாக்குவோம்.
பிரீதம், இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் பாக மிகப்பெரும் சுமைகளை உனக்கு விட்டு வந்திருப்பதற்காக நான் வருந்துகிறேன். நான் சிறைக்கு வந்த பிறகு அம்மாவுக்கும் உனக்கு மான பிணக்குகள் கூட தீர்ந்திருப்பதாக அம்மா கூறினார். அவர்களை தன் மகளைப் போல பார்த்துக் கொள்வதாக அம்மா குறிப்பிட்டார். உன் தாய், தந்தையர் உனக்கு உதவ முயற்சித்த போது அதை மறுத்துவிட்டதாகவும் அம்மா என்னிடம் சொன்னார். நீ பக்குவப்பட்டிருப்பதையும் தைரியம் அடைந்திருப்பதையும் நான் உணர்கிறேன். சிறை யிலிருக்கும் 146 பேரையும் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் பல தொழிற்சங்கங் கள் போராடிக் கொண்டிருக் கின்றன. அவர்களது முயற்சியில் உன்னையும் இணைத்துக் கொள். வாரா வாராம் என்னைப் பார்ப்பதை விட வாரத் தில் ஒரு நாளாவாது அந்த முயற்சியில் பங்கெடுப் பதையே நான் பெருமை யாகக் கருதுகிறேன்.அன்புடன்- ஜிதேந்தர்
தமிழில் : க.கனகராஜ்
நன்றி - தீக்கதிர் 11.11.2013

Good Narration
ReplyDeletekangalil kanneer
ReplyDelete