Wednesday, November 20, 2013

கட்டப் பஞ்சாயத்து நடத்து, கலவரத்தை தூண்டு, கௌரவிக்கப் படுவாய்!





நாற்பது உயிர்களை பலி கொண்ட முசாபர்நகர் கலவரம் இன்னும் நினைவில் உள்ளதல்லவா?

ஒரு சிறிய பிரச்சினை ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு மிகப் பெரிய கலவரமாக வெடித்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகின. சொந்த மாவட்டத்திலேயே ஆயிரக் கணக்கானவர்கள் அகதிகளாக முகாம்களிலே அடைபட்டு இருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் ஆப்கான் எல்லை பகுதியிலே ஒரு பாகிஸ்தான் இளைஞனை தாலிபன்கள்  அடித்துத் தாக்கிய காணொளிக் காட்சியை யுடியூபிலிருந்து எடுத்து அதை இஸ்லாமியர்கள் இந்து வாலிபன் ஒருவனை தாக்குவதாக சித்தரித்து வி.சி.டி யாக வெறுப்பை பரப்பியவர் சங்கீத் சோம் என்ற பாஜக எம்.எல்.ஏ. அவருக்கு சுரேஷ் ராணா என்ற இன்னொரு எம்.எல்.ஏ வும் உடந்தை. இந்த வி.சி.டி கள்தான் முசாபர்நகர் கலவரம் தீவிரமாகக் காரணம்.

இதைத் தவிர காப் பஞ்சாயத்துக்கள் என்ற பெயரில் இயங்கும் ஜாதிய கட்டப் பஞ்சாயத்துக்களின் சங்கமமாக மகா பஞ்சாயத்து நடத்தி கலவரத்தை வேகப்படுத்திய குற்றவாளிகளும் இவர்கள் இருவர்தான்.

இந்த இருவரையும் பாஜக கௌரவப் படுத்தப் போகிறதாம். ஆக்ராவில் நடைபெற உள்ள பாரதீய ஜனதா கட்சியின் பேரணி, பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இவர்களை பொன்னாடை போர்த்தி மலர் மாலை சூட்டி மகுடம் வைத்து கௌரவித்து அழகு பார்க்கப் போகிறாராம்.

இதன் மூலம் பாஜக தனது தொண்டர்களுக்கு என்ன செய்தி சொல்கிறது?

கலவரம் செய், ரத்த ஆற்றில் எதிரிகளை மிதக்க விடு, அப்பாவிகளை அகதியாக்கு. உன்னை நாங்கள் கௌரவிப்போம் என்பதுதான் அந்த செய்தி.

உருப்படுமா தேசம்?

1 comment:

  1. குஜராத்தில் ரத்த ஆறு ஓடவிட்ட பிறகு இப்போ நாடு முழுவதும் ரத்த ஆறு ஓட விடவும் , சிறுபான்மை மக்களை ஈவு இரக்கமின்றி காவு கொடுக்கவும் துணிந்து விட்டார் . இவர் பிரதமரானால் நாடு தாங்காது ! மக்கள் தாங்க மாட்டார்கள் . இன்னொரு புறம் சிறு பிள்ளை ராகுலின் கையில் ஆட்சியை கொடுக்க காங்கிரஸ் துடிக்கிறது. இவர்களுக்கு இடையில் மக்கள் மாட்டி கொண்டு தவிக்கின்றனர். இந்த நிலையில் காம்ரேட்கள் சரியான முடிவெடுத்து வழி காட்டுதல் தராமல் போனால் மக்கள் நிலை ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !

    ReplyDelete