Thursday, April 7, 2022

கட்சி தாவுகிறாரா சுமந்து?

 



“சுமந்து கரடியே காரி உமிழ”  என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

அப்படி என்ன அதிர்ச்சியைத் தந்தார் சுமந்து?

தமிழக முதல்வர் துபாய் போனதை முதலில் நக்கலடித்த சுமந்து லூலு நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வரவேற்றதே கொஞ்சம் நெருடலாக இருந்தது.

எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றது என்று ஆட்டுக்காரருக்கு பதில் சொன்ன சுமந்து இன்னொரு பதிவில் இன்னும் காட்டமாக ஒரு பாஜக சங்கியை தாக்கியுள்ளார்.

நவராத்திரி காலத்தில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட தெற்கு டெல்லி மாநகராட்சியின் மேயரைக் கண்டித்துள்ளார். அது மட்டுமா இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோம்பிருக்கும் காலத்தில் உணவு விடுதிகள் செயல்பட்டால் அவர்களின் மத உணர்வு புண்படும் என்று மாலை வரை உணவு விடுதிகளை மூடவும் உத்தரவிடுவாரா என்றும் கேட்டுள்ளார்.


 
இதையெல்லாம் பார்த்தால் சுமந்து கூடிய சீக்கிரம் கட்சி மாறி விடுவார் என்றே தோன்றுகிறது.

 

 

No comments:

Post a Comment