Tuesday, April 5, 2022

தேவையில்லா ஆணி மோடி

 


பில்லா - ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் நேற்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளார்கள்.

அவை பற்றி வழக்கறிஞர் தோழர் பிரதாபன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

குற்றவியல் நடைமுறை ( அடையாள சேகரிப்பு) சட்ட முன்வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, இனி வழக்கில் கைதாககூடியவர்களுடைய அங்க அடையாளங்கள் மட்டுமில்லாமல், கைரேகை, கால்களின் அச்சு, கண்கள், உடல் அவையங்கள் இதைத்தவிர கையெழுத்து, behavioural attributes உட்பட அனைத்தும் பதிவு செய்ய காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த சட்டம் குறித்த விதிமுறைகளை அரசு தாக்கல் செய்யவில்லை. கேள்விகளுக்கும் திருத்தங்களுக்கு பதில் அளித்த அமித்ஷா, 7 ஆண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்யாதவர்கள், தங்களின் அடையாளம் பெறப்படுவதை மறுக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.
காவல்நிலையத்தில் பேசவே விடமாட்டார்கள். மறுக்க முடியுமா?

புதியவகை குற்றப்பரம்பரை சட்டமாக இது ஆகிடுமா? என்ற அச்சம் எழாமல் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் ஹிட்லரின் நாஜி ஆட்சி போல, பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுவருகிறது. அதை தடுக்காத வகையில் வெறும் கோஷங்களால் பாஜகவை வெல்ல இயலாது.

குற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதத்தை அதிகரிக்கத்தான் இத்திருத்தங்கள் என்று அமித்ஷா சொல்கிறார்.

"கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?" என்பது போல இத்திருத்தங்கள் மூலம் எப்படிய்யா குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் அதிகமாகும் என்றுதான் நாம் கேட்க வேண்டும்.

மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்க மோடி பிடுங்கிய தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.

பிகு: இந்த கிரிமினல்களுக்கு நிஜமாகவே குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? வேறு ஒரு வழக்கு பற்றி நாளை பார்ப்போம்.

No comments:

Post a Comment