Tuesday, April 19, 2022

வழக்காடிகள்தான் ரொம்பவே பாவம்.

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி மிகவும் கவலை அளித்தது. தற்போதைய தலைமை நீதிபதி, அவருக்கு அடுத்ததாக அப்பொறுப்புக்கு வரவுள்ள நீதிபதி என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் ஆறு மாதத்திற்குள் ஓய்வு பெறவுள்ளனர். ஏற்கனவே இரண்டு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

ஓய்வு பெறுவதற்கு இரண்டு மாதம் உள்ளவர்கள் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலேஜியத்தில் இடம் பெற முடியாதாம். அதனால் புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் தற்போதைய தலைமை நீதிபதியோ அல்லது அடுத்து வருபவரோ ஈடுபட முடியாது என்றொரு விதி உள்ளதாம்.

அதனால் புதிய நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறைகள் தொடங்கவே இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். அவர்கள் தேர்ந்தெடுத்த பின்பு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்குமோ அல்லது இழுத்தடிக்குமோ?

ஏற்கனவே 72,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இந்த தேக்க நிலைக்குப் பிறகு இன்னும் எத்தனை ஆயிரம் வழக்குகள் முடங்கிப் போகுமோ?

வழக்காடிகளின் நிலைமைதான் மிகவும் பாவம்

No comments:

Post a Comment