Monday, March 10, 2014

உங்கள் மகன் மோடி போல இருப்பதை அனுமதிப்பீர்களா?



இன்றுள்ள பெற்றோர் அனைவருமே தங்கள் குழந்தைகள் ஒவ்வொரு தேர்விலும் நூறு சதவிகித மதிப்பெண் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு கேள்விக்குக் கூட தவறான பதில் எழுதிடக் கூடாது  என்று விரும்புகிறார்கள்.

அப்படி தங்கள் குழந்தைகள் ஒரு கேள்விக்குக் கூட தவறான பதில் அளித்து மதிப்பெண்கள் குறையக்கூடாது என்று எதிர்பார்ப்பது இயல்பானது, நியாயமானது.

அதே நேரம்

லாகூர் சிறையில் அடைபட்டிருந்த பகத்சிங்கை அந்தமான் சிறையில் வாடியதாய் சொல்கிற,

வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற உப்பு சத்யாகிரத்தை வ.உ.சி தலைமையில் நடைபெற்றதாக சொல்கிற,

பஞ்சாப் எல்லையை கடக்காத அலெக்ஸாண்டரை பீகாரில் பீகாரிகள் போரில் தோற்கடித்தாக சொல்கிற,

தனது மாநிலத்தில் பிறந்த மகாத்மா காந்தியின் பெயரை மோகன்லால் கரம்சந்த் என்று மலையாள நடிகரின் பெயரைச் சொல்கிற,

தன் கட்சியின் நிறுவனர் பெயரையே தவறாக சொல்கிற

மோடியை ஆதரிக்கலாமா? இவர் பரிட்சை எழுதினால் இவருக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்தான் கிடைக்கும். தங்கள் குழந்தைகள் நூறு சதவிகிதம் மதிப்பெண் பெற வேண்டும் என்று விரும்புகிற பெற்றோர் ஒரு மக்கு பிளாஸ்திரியை இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எங்கள் கோட்ட மகளிர் மாநாட்டில் அறிக்கை மீதான
விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகையில் பேசியது.

3 comments:

  1. உங்கள் மகன் மோடி போல் இருப்பதை அனுமதிப்பீர்களா ?
    செருப்பால அடிப்பேன் ! கட்டின பொஞ்சாதிய ரோட்ல விட்டுட்டு நாட்டு மக்களை காப்பாத்தப் போறானா ? போங்கடா ! பிச்சு புடுவேன் ! பிச்சு !---காஸ்யபன்.

    ReplyDelete
  2. I do not know. But I certainly would not want my son to be like S.Raman,Vellore.
    Please God, save this planet from communists.

    ReplyDelete
  3. Mr Sabareesan, God can not save the planet from People like Modi & people who don't wish to realize the truth. But Communists alone can save the planet & people including you

    ReplyDelete