Monday, March 17, 2014

தமிழருவி மணியனை இப்படி புலம்ப வச்சுட்டாங்களே?



தரகுப்புயல் தமிழருவி மணியனின் புலம்பல் பேட்டியை படிக்கும் போது உண்மையிலேயே சிரிப்பு சிரிப்பாக வந்தது.

துவக்கத்திலிருந்தே முரண்பாடுகளின் மூட்டையாக இருக்கிற த.அ.ம அவர்களுக்கு இந்த கதிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது போலவே நடந்திருக்கிறது. தன்னை ஒரு அரசியல் சாணக்கியர் என்று கருதிக் கொண்டு அவரே சொன்னது போன்ற சுயநலக் கட்சிகளை ஒரு அணியில் இணைக்க எடுத்த முயற்சிகள் தொடர்ந்து கேலிக்கூத்தாக மாறியதனால் ஏற்பட்ட வெறுப்பால் இப்போது திருவிளையாடல் தருமி வேட நாகேஷ் போல தன்னந்தனியாக மண்டபத்தில் புலம்பும் கதிக்கு ஆளாகியுள்ளார்.

இவர் மாய்ஞ்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு உருவாக்கின கூட்டணிக்கு ஆதரவா இவர் பிரச்சாரம் பண்ண மாட்டாராம், சரிதான், யாருமே கூப்பிட மாட்டோம்னு சொல்லிட்டாங்க போல. சரி த.அ.ம ஐயா உங்க ஓட்டையாவது போடுவீங்களா?

நீங்களே சொல்லிட்டீங்க, பாஜக, பாமக, மதிமுக, தேமுதிக எல்லோருமே சுயநலக் கட்சிங்க, சுயநலத்துக்காகத்தான் கூட்டணி வச்சுருக்காங்கனு. சரி சரி இந்த சுயநல கட்சிங்க சுயநலக் கூட்டணி அமைக்க நீங்கதான் சுய நலம் இல்லாம கஷ்டப்பட்டீங்க. ஆனா பாவம் உங்களுக்கு அவங்கல்லாம் சுய நலக் கட்சிங்கனு இப்பதான் தெரியுது. நீங்கதான் சுயநலம் இல்லாத பொது நலக் கொள்கை உடையவராச்சே, இப்ப சொல்லுங்க இந்த சுயநலக் கூட்டணிக்கு உங்க ஓட்டை போடுவீங்களா, மாட்டீங்களானு.

பாஜக தன்னோட மதவெறிக் கொள்கைகளை அமலாக்க பாஜக முயற்சி செய்தால் அதற்கு எதிராக முதலில் போராடுவது நானாகவே இருப்பேன் என்று வேறு பிரகடனம் செய்துள்ளீர்கள். நல்லது. உங்கள் மனதில் உள்ள அச்சம் வெளிப்பட்டுள்ளது. இது இப்போது வெளிப்பட்ட அச்சமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. ஆழ் மனதில் ஒளிந்து கொண்டு இருந்தது இப்போது வெளிப்பட்டு விட்டது.

அப்படி இருக்கையில் இப்போதும் மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறீர்களே? நியாயமா இது?

ஒரு வேளை இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளால் ஏதாவது சிக்கல் ஏற்பட்டு விட்டதோ?

உங்கள் நன்மைக்காக சொல்கிறேன். பேசாமல் கொஞ்ச நாள் குற்றாலம், குணசீலம், ஏர்வாடி, பாண்டி மடம் எங்காவது சென்று ஓய்வெடுத்து விட்டு வாருங்களேன்.



4 comments:

  1. \\\\ உங்கள் நன்மைக்காக சொல்கிறேன். பேசாமல் கொஞ்ச நாள் குற்றாலம், குணசீலம், ஏர்வாடி, பாண்டி மடம் எங்காவது சென்று ஓய்வெடுத்து விட்டு வாருங்களேன்.////

    good advice brother.

    ReplyDelete
  2. அனானி அது உனக்கும்தான்

    ReplyDelete
  3. Anney...unga yogiyadhai daan ooru arinjadache...ungala pathi oru comment potta appadiye kaanama poyidume...

    ReplyDelete
  4. என்ன அனானி, திடீருனு அண்ணேனு மரியாதையெல்லாம் கூடுது?
    அர்த்தமற்ற, அபத்தமான தனிப்பட்ட தாக்குதல்கள் காணாமல்தான் போகும்.

    ReplyDelete