பொதுவாக எந்த
விஷயத்தையும் தெளிவாக கூறுவதில் கலைஞருக்கு நிகர் யாரும் கிடையாது. ஒரு விஷயத்தை
ஆதரிப்பதோ இல்லை எதிர்ப்பதோ அது அந்த சமயத்திற்கு கறாராக இருக்கும். பின்பு
வழுக்குவது சறுக்குவது என்பது வேறு விஷயம்.
அவரது அந்த
தெளிவு மங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை அவரது உடன் பிறப்புக்களுக்கே
அவரது நேற்றைய உரை கொடுத்திருக்கும்.
காங்கிரஸ்காரர்கள்
பழி வாங்கினார்கள், நன்றி கெட்டவர்கள், விசுவாசம் இல்லாதவர்கள், தவறு செய்தவர்கள்,
நல்லது செய்தவர்களை நினைத்துப் பார்க்காதவர்கள், அதனால்தான் அதல பாதாளத்திற்கு
போய் விட்டார்கள் என்றெல்லாம் திட்டி விட்டார்.
இவ்வளவும்
சொல்லி விட்டு காங்கிரஸ் கட்சி கேட்டால் ஆதரவும் தருவேன் என்றும் சொல்கிறார்.
அதற்கு அவர்
சொல்லியுள்ள காரணங்களில் வலு கிடையாது என்பது அவருக்கே தெரியும்.
ஏன் இந்த
தடுமாற்றம்.
மகன்
கொடுக்கும் டார்ச்சர் ஓவராக போய் விட்டதால் வந்த பிரச்சினையோ?
அவரு ரொம்ப தெளிவா சொல்வது உங்களுக்கு புரியவில்லையா தோழர் ? "மோடி நல்லவர்" அதே சமயம் "காங்கிரஸ் கேட்டால் ஆதரவு தருவோம்" - இது யார் ஆட்சிக்கு வந்தாலும் தன் குடும்பத்தார் திஹாருக்கு செல்வதில் இருந்து தப்பிக்க சொல்லி வைத்தது ! நம்மை மிகத் தெளிவாக குழப்புவதில் அவர் மிக திறமைசாலி !
ReplyDeleteஅவர் எங்கே என்று குழம்பினார்
ReplyDeleteதான் தன் குடும்பம் பிரச்சனையின்றி இருக்க
என்ன சொல்லவேண்டுமோ என்ன செய்ய வேண்டுமோ
அதைச் சரியாகத்தான் என்றும் செய்து வருகிறார்
நாம் தான் அவரை தவறாக நினைத்துக் குழம்புகிறோம்
இந்தியாவை பல வருடம் ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை பார்த்து தலைவார் கலைஞர் அவர்கள் “ நயவஞ்சகம் செய்து விட்டது, நன்றி மறந்து விட்டது, அதையெல்லாம் உணார்ந்து திருந்தி மன்னிப்பு கேட்பின் போனால் போகிறது என பொதுமன்னிப்பு கொடுப்போம்” என சொன்ன வார்தைகளுக்கு ”கலைஞர் காங்கிரசுக்கு ஆதரவு” என பொருள் புரிந்து கொண்ட புண்ணியவான்களே, இது தலைவர் அவர்கள் ஆடிய அரசியல் சதுரங்கத்தில் உங்கள் யாருக்கும் விளங்காத காய் நகர்த்தல்.கடந்த இரு நாட்களாக “மதுரை சென்று அழகிரியை சந்திப்பேன்” என பிதற்றிக்கொண்டு இருந்த தேசிகன். முதலில் காங்கிரஸ் தன் கதவை அழகிரிக்கு மூடும் படியாக செய்த ஒரு ’காரியம்’ தான் நேற்று தலைவரது “மூவ்”.
ReplyDelete