Tuesday, March 25, 2014

ஐந்து மணி நேரத்தில் பாஜக விற்கு வந்த ஞானோதயம்

மங்களூரில் பெண்களை இழிவு படுத்திய ஸ்ரீராம் சேனா கும்பலின்
தலைவன் பிரமோத் முத்தாலிக்கை கட்சியில் சேர்த்த ஐந்து மணி
நேரத்திலேயே நீக்கவும் செய்து விட்டது பாரதீய ஜனதா.

அவ்வளவு மோசமான மனிதன் என்பது இந்த மனிதனைப் 
பயன்படுத்தி பெல்காமில் கலவரங்களைத் தூண்டிய  போதோ
இல்லை  சங் பரிவார அமைப்பான பஜ்ரங் தள்ளின் கர்னாடக 
மாநில தலைவராக செயல்பட்ட போதோ தெரியவில்லை போலும்.

அவ்வளவு அப்பாவிகள் பாஜகவில் உள்ளவர்கள்.

மோசமான ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற
பாஜக வின் கொள்கை உறுதியை பாராட்டலாம் என்று பார்த்தால்
ஊழல் புகழ் யெட்டீயூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில்
இந்த ஞானோதயம் பல நாட்களுக்குப் பிறகும் வரவில்லை.

அது சரி மோசமான ஆட்கள் இருக்கக் கூடாது என்று பார்த்தால்
கட்சியையே கலைத்து விட வேண்டுமே7 comments:

 1. hihihihhhi

  http://timeforsomelove.blogspot.com/2014/03/blog-post_25.html

  ReplyDelete
 2. அவரு மனுசன், நேரடியா எழுதியிருக்காரு. அந்த இணைப்பைக் கூட அனானியா கொடுத்திருக்கிற நீ ஒரு மானங்கெட்ட ஜென்மம். எதுக்கு இந்த வெட்கம் கெட்ட பொழப்பு?

  ReplyDelete
 3. Comrade GR in The Hindu ,( today)
  1.""There is a political reason behind AIADMKS unilateral decision."
  2."Now Jaya says that a government will be formed at the centre with the participation of AIADMK.""

  This is what everybody who have common sense were crying against LEFT all along till Amma Kicked them out. But only now Comrade GR realises .
  அவ்வளவு அப்பாவிகள் CPIM il உள்ளவர்கள்.

  ReplyDelete
 4. Left was thinking that after making Amma as the Prime minister , Amma will govern India as per the directions of LEFT. Amma is consistant in the policy of ditching every alliance partner after winning the elections, : 1, BJP. 2 CONGRESS in the centre and 1. PMK 2.MDMK at the state level,and these are very well in the memory of every body who have common sense.
  If left could not learn the lesson from the above experiences, then either left is a party run by Foolish leadership or an Ugly Selfish Opportunistic leadership. Since i have regards on LEFT principles i put it as an aberration of the left leadership,

  ReplyDelete
 5. நண்பரே,

  மோசமான ஆட்கள் இல்லாத இடதுசாரிக் கட்சியினர் போயஸ் கார்டனிலிருந்து மூக்கறுப்பு பட்டு வந்தனர். அப்படியும் தலைகுனிவோடு மக்களைச் சந்திக்கத்தானே போகிறார்கள்.. மதச்சார்பின்மை பற்றிப் பேசியே ஏமாற்றும் கட்சிகளுக்கு பி ஜே பி ஒரு மாற்று.

  தயவுசெய்து, எழுத்தில் கண்ணியம் காக்கவும்.


  கோபாலன்

  ReplyDelete
 6. கோபாலன் சார், உங்கள் பின்னூட்டத்தில் மதச்சார்பின்மைக்கு மாற்று பிஜேபி என்று சொல்லி பிஜேபி மதம் சார்ந்து செயல்படும் கட்சி என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

  நாங்கள் தலை நிமிர்ந்து கௌரவமாகத்தான் மக்களை சந்திக்கிறோம். மூக்கறுப்பு படப் போவது யார் என்பது தேர்தல் முடிவிற்குப் பிறகு தெரியும். ஆமாம் நீங்க கூட்டணி அமைச்ச கதைதான் ஊர் சிரிச்சதே, அதைப் பற்றி என்ன சொல்றீங்க?

  //மங்களூரில் பெண்களை இழிவு படுத்திய ஸ்ரீராம் சேனா கும்பலின்
  தலைவன் பிரமோத் முத்தாலிக்கை கட்சியில் சேர்த்த ஐந்து மணி
  நேரத்திலேயே நீக்கவும் செய்து விட்டது பாரதீய ஜனதா.

  அவ்வளவு மோசமான மனிதன் என்பது இந்த மனிதனைப்
  பயன்படுத்தி பெல்காமில் கலவரங்களைத் தூண்டிய போதோ
  இல்லை சங் பரிவார அமைப்பான பஜ்ரங் தள்ளின் கர்னாடக
  மாநில தலைவராக செயல்பட்ட போதோ தெரியவில்லை போலும்.

  அவ்வளவு அப்பாவிகள் பாஜகவில் உள்ளவர்கள்.

  மோசமான ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற
  பாஜக வின் கொள்கை உறுதியை பாராட்டலாம் என்று பார்த்தால்
  ஊழல் புகழ் யெட்டீயூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில்
  இந்த ஞானோதயம் பல நாட்களுக்குப் பிறகும் வரவில்லை.

  அது சரி மோசமான ஆட்கள் இருக்கக் கூடாது என்று பார்த்தால்
  கட்சியையே கலைத்து விட வேண்டுமே//
  சரி, மேலே எழுதியதில் எதை கண்ணியக் குறைவு என்று சொல்கிறீர்கள்? பிரமோத் முத்தாலிக், யெட்டீயூரப்பா, ரெட்டி சகோதரர்கள் ஆகிய பெயர்கள் இடம் பெற்றதால் பதிவின் கண்ணியம் பாதிக்கப்பட்டு விட்டது என்று நீங்கள் கருதினால் நான் அதை ஏற்கிறேன். ஆம் எனது வலைப்பக்கத்தில் அவர்களின் பெயர் இடம் பெறுவது எனக்கு இழுக்குதான்.

  சரி இனி உங்கள் வீரத்துறவி ராம கோபாலன், ஹெச்.ராஜா ஆகியோரைப் போல கண்ணியமாக (?????????????!!!!!!!!!!!!) பேசவும் எழுதவும் கற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 7. அனானி ,ரொம்ப இளிக்காதே, பல் உடையப் போகுது. பார்த்து. உனக்கு ஒரு வேட்டு இருக்கு. ரொம்ப துள்ளாதே

  ReplyDelete