Monday, March 10, 2014

கருங்கற்கள், செங்கல்கள் - ஒரு அரசியல் முரண்பாடு



இந்த நினைவகத்தை அமைப்பதற்கான கருங்கற்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்கள். உழைப்பாளி மக்களின் தியாகத்தை நினைவு கூறவும் உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை உருவாக்கவும் அமைக்கப்பட்டுள்ள வெண்மணி நினைவகத்திற்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து கருங்கற்கள் வந்துள்ளது பாராட்டத்தக்கது. தொழிலாளர்களை ஒன்று படுத்த வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆக்கபூர்வமான குணாம்சத்திற்கு இது எடுத்துக்காட்டு.

அதே நேரம் இதே இந்தியாவில் செங்கல்கள் நாடு முழுவதிலிருந்தும் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரு வழிபாட்டுத்தலத்தை இடித்து அந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்டுவது என்ற நோக்கத்தோடு சேகரிக்கப்பட்ட செங்கல்கள். மக்களை மத ரீதியாக பிளவு படுத்துவது என்ற தீய சிந்தனையோடு செய்யப்பட்ட செயல் இது. இது சங் பரிவாரின் குணாம்சம்.

புதிதாக அமைக்கப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவகத்தை திறந்து வைத்து உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் பேசியது.

No comments:

Post a Comment