Friday, March 21, 2014

பாஜகவின் தமிழ் வேடம்தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்போம் - சென்னையில் வெங்கையா நாயுடு பேச்சு (மாலை முரசு
  16-03-2014)தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே காங்கிரஸ் தோல்விபயத்தில் தத்தளித்துக் கொண்டிருக் கிறது. தமிழ் நாட்டில் எப்போதும் கோஷ்டிகளின் போட்டா போட்டிகளைப் பார்த்து வரும் காங்கிரஸ் கட்சி யில் தற்போது தேர்தலில் போட்டியிடு வதற்குக் கூட தலைவர்கள் யாரும் தயா ராக இல்லை. அது வேறு விஷயம்.ஆனால் சந்தடி சாக்கில், தாங்கள் ஏதோ தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பது போலவும், தமிழ் நாடும், தமிழ் மொழியும் தங்களின் உயிர் மூச்சு போலவும் கதையளக்க முயன்றுள்ளார் பிஜேபி-யின் முன்னணித் தலைவர் திருவாளர் வெங்கையா நாயுடு.


1998 முதல் 2004 முடிய ஆறாண்டுக்காலம் நடைபெற்ற பிஜேபி கூட்டணி ஆட்சியின் போது, நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத தேவ பாஷை(??) சமஸ்கிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், காலத்தால் மிகவும் மூத்த மொழியான தமிழுக்கு, உலக அளவில் பல கோடி மக்களால் பேசப்படுகிற வாழும் மொழியான தமிழுக்குச் செம்மொழி தகுதி தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட போது, எடுத்த எடுப்பிலேயே அதை நிராகரித்தது அன்றைய பிஜேபி அரசு.தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கக் கோரி தலைநகர் தில்லிக்கே நேரில் சென்று ஆர்ப்பாட்ட இயக்கம் நடத்தியது தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்கள் - கலைஞர்கள் சங்கம்.புரட்சிப் புயல் வைகோ கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோடு, உணர்ச்சி பொங்க வீர உரையாற் றினார்.

 ஆனால் ஜென்டில்மேன் வாஜ்பாய் கடைசி வரையிலும் கண்டு கொள்ளவே இல்லை. இல. கணேசன் முதல் எச். ராஜா வரை யாரும் வாய் திறக்கவே இல்லை

2004-ல் இடது சாரிகளின் ஆதரவோடு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பின்பே, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைப் பெற முடிந்தது. தமிழ் நாட்டு மக்களின் நூறு வரு டத்திற்கும் மேலான கனவுத் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். தமிழக மக்களின் தொடர்ச்சியான போராட்ட இயக்கங்களின் பயனாக, பிஜேபி கூட்டணி ஆட்சிக் காலத் தில்தான் சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டு, முதல் கட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது


ஆனால், கணிசமான அளவில்வேலைகள் நிறைவுற்ற பின்னர், இப் போது திட்டத்தையே நிறுத்தி வைக்கச் சொல்லி கோர்ட் படியேறி உள்ளது பிஜேபி. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப் பினையும் தட்டிப் பறித்து தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது.அறிவியல் கண்ணோட்டத்திற்கு எதிராகச் செயல்படும் ஆர்எஸ்எஸ் - பிஜேபி கூட்டத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து, சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப் படுத்த இடது சாரிக் கட்சிகளும், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தான் இடைவிடாது பாடு பட்டு வருகின்றன.உண்மை இப்படி இருக்க, தாங்கள் தமிழ் நாட்டு மக்கள் மீது தீராத பாசம் கொண்டிருப்பதைப் போல வேடம் தரித்துக் கொண்டு உலா புறப்பட்டிருக்கிறது பிஜேபி. தமிழ் நாட்டு மக்கள் பிஜேபி-யையும் அதன் திடீர்க்கூட்டாளிகளையும் தேர்தல் களத்தில் ஓட ஓட விரட்டப் போவது நிச்சயம்.- . மன்னன்

நன்றி - தீக்கதிர் 21.03.2014

No comments:

Post a Comment