Saturday, March 8, 2014

உலகம் உள்ளவரை உங்கள் புகழ் பாட






ஆண்டுகள் பல உருண்டால் என்ன?
ஆயிரம் நிகழ்வுகள் பல
பின்பு நடந்தால் என்ன?
கண்ணில் ததும்பும் நீரும்
கனலாய் மூளும் கோபமும்
காலத்தால் மாறிடுமா?

அவர்கள் கேட்டது என்னவோ
கூடுதலாய் அரைபடி நெல்.
ஆதிக்க சக்திகள் அளித்ததோ
நாற்பத்தி நான்கு பேருக்கு
வாய்க்கரிசி.

மஞ்சள் கொடி ஏந்திய
மனிதத்தன்மையற்றவர்கள்
மாடுகள் போலவே
சிவப்பைக் கண்டு மிரண்டார்கள்.
செங்கொடியின் புதல்வர்களை
எரியும் தீயில் மாய்த்தார்கள்.

சாம்பலில் உதிக்கும்
பறவைகள் எல்லாம்
புராணக் கதையில்லை.
கண் முன்னே நடக்கும்
சரித்திர நிகழ்வு.

ஒலைக்குடிசையில்
ஒண்ட இடமின்றி
எரிந்த எங்கள்
தோழர்கள் தியாகத்தை
என்றென்றும் சொல்ல கம்பீரமாய்
வெண்மணியில் நினைவாலயம்.

உழைக்கும் மக்களின்
உதிரத்தால் உருவான
உன்னதமான கற்கோட்டை
உங்களின் புகழ் பாடும்
உலகம் உள்ளவரை.
உங்களின் போராட்டத்தை
உறுதியோடு எடுத்துச் செல்வோம்
எங்கள் மூச்சு உள்ளவரை

(வெண்மணி தியாகிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நினைவாலயத்தை நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் திறந்து வைக்கிறார். தமிழகம் முழுதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் நாளை வெண்மணியில் சங்கமிக்க உள்ளனர். நானும் இதோ புறப்பட்டு விட்டேன்)


1 comment:

  1. ஒலைக்குடிசையில்
    ஒண்ட இடமின்றி
    எரிந்த எங்கள்
    தோழர்கள் தியாகத்தை
    என்றென்றும் சொல்ல கம்பீரமாய்
    வெண்மணியில் நினைவாலயம்.
    Nenjarntha Vaazhthukkal.

    ReplyDelete