சமையலறை அனுபவங்கள் பற்றி நான் எழுதுவது பலருக்கும் பாதிப்புக்கள் ஏற்படுத்துகின்றது என்பதை நான் அறிவேன். அது குடும்பத்தில் கூட எதிரொலிக்கும் என்பது எதிர்பாராதது.
சில நாட்களுக்கு முன்பு ஒரு நெருங்கிய உறவினர் கீ ரைஸ் மற்றும் கிரீன் பீஸ் மசாலா செய்து முக நூலில் போட்டு இது போல உங்களால் செய்ய முடியுமா என்று கேட்க, வேறு வழியில்லாமல் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் வந்து விட்டது. என் மனைவி வழக்கம் போல் போட்டது ஒரே ஒரு நிபந்தனைதான். கிச்சம் மட்டும் நாசமாச்சு?????
அந்த சவாலை சந்திக்க நான் நேற்று செய்ததுதான் குட மிளகாய், காலிப்ளவர் புலாவ் மற்றும் காலிப்ளவர், பட்டாணி குருமா.
குட மிளகாய் புலாவ் செய்த வழி முறை கீழே.
முதலில் இரண்டு தக்காளியை தனியாக சாறு தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு கப் தேங்காய் துறுவல், ஒரு ஸ்பூன் தனியா, இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஏழு மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் தனியாக அறைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை கொஞ்ச நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
காலிப்ளவரை தனியாக சுடுநீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து
தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். குருமாவுக்கு தேவையான பச்சை பட்டாணியைக் கூட இத்தோடே ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து பெருஞ்சீரகம், லவங்கம், போட்டு பிறகு வெங்காயத்தை வதக்கவும். அதன் பின்பு குடமிளகாயும் அதற்கு பிறகு காலிப்ளவரையும் சேர்த்து வதக்கி பிறகு அறைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு தக்காளி சாறையும் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பிறகு அதிலே அரிசியை போட்டு குக்கரை மூடி இரண்டு சவுண்ட் வந்த பின்பு அணைத்து விடவும். அதற்குப் பிறகு கொத்த மல்லி, வறுத்த முந்திரி கலந்து பறிமாறவும்.
இப்போது குருமாவிற்கு வருகிறேன்.
தேங்காய், தக்காளி, வெங்காயம், லவங்கம், கசகசா சேர்த்து தனியாக அறைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு வெடித்த பின்பு வெங்காயம், தக்காளி வதக்கி பின்பு காலிப்ளவர், பட்டாணி சேர்க்கவும். அதற்குப் பிறகு அறைத்து வைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீராக இருந்தால் கொஞ்சம் கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.
எப்படி உள்ளது என்று படத்தை பார்த்து சொல்லுங்கள். அதற்கு முன்பு என் சகலை சொன்ன ஒரு கமெண்ட் மிகவும் முக்கியம். அதை கடைசி வரியில் பார்க்கவும்.
உங்களுக்கு சமைக்கத் தெரியும்னு நீங்க பாட்டுக்கு ஏதோதே செஞ்சுட்டு எனக்கும் மத்த ஆம்பிளைங்களுக்கும் ஏழரையை கொண்டு வரீங்களே! நியாயமா இது?
அப்படியா? இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறதோ?
அய்யா,
ReplyDeleteஉங்க சகலை ஏதோ தமாசுக்கு சொல்லியிருப்பாரு கண்டுக்காதிங்க.
புதுசா புக்கு பார்த்து சமைக்க கத்துக்கிற உங்க கஷ்டம் அவருக்கா தெரியும் அவ்வ்!
ஆனாலும் , இந்த தனியா ,மிளகாய் வற்றல்,அஸ்கா போன்ற புத்தக சொல்லாடலை தவிர்க்கப்பார்க்கவும், நீங்க ஏதோ சமையல் கலை புக்கை காப்பி அடிக்கிறது பளிச்சுனு காட்டிடுது :-))
வழக்கமாக , வீட்டுல எல்லாம் , கொத்த மல்லி(விதை), காய்ஞ்ச மிளகா, சர்க்கரை (சீனி)போன்ற பதங்களே பயன்ப்படுத்துவார்கள்.
கண்டு பிடிச்சுட்டாருய்யா அறிவாளி வவ்வாலு நான் புதுசா சமைக்க கத்துக்கறேன்னு. வலைப்பக்கத்தில புதுசா சமையல் பத்தியும் எழுதறேனுதான் அவரால கண்டு பிடிக்க முடியல பாவம். அவ்வ்.
ReplyDeleteபாவம் அவரு தலைகீழா பறந்தாலும் இல்லை நேரா நின்னாலும் சமைக்க வரல போல.
மிஸ்டர் வழக்கமான சமையல் இருபது வருஷத்துக்கு மேல சமைக்கிற அனுபவம் உண்டு. புத்தகத்தில போட்டத அப்படியே அப்படியே காப்பி அடிக்கிற பழக்கம் எனக்கு கிடையாது. அந்த அவசியமும் கிடையாது. நான் பயன்படுத்தற வார்த்தையதான் எழுதவும் முடியும்.
அப்புறமா அவர் கண்டிப்பாக தமாசுக்கு சொல்லவேயில்லை.
பார்க்கும்போதே நல்லா இருக்கும்ன்னு தோணுது. அப்படியே எதாவது ஒரு பஸ்சுல கொஞ்சம் பார்சல் கட்டிக் கொடுத்தனுப்பவும். நான் வாங்கிக்குறேன்.
ReplyDeleteஅய்யா,
ReplyDelete//பாவம் அவரு தலைகீழா பறந்தாலும் இல்லை நேரா நின்னாலும் சமைக்க வரல போல. //
உங்க அளவுக்கு எக்ஸ்பெர்ட்டுனு சொல்லிக்க முடியாது ஆனால் சமைப்போம்ல, நீங்களாவது காலிஃப்ளவர் புலாவ்,நாமல்லாம் சிக்கன் புலாவ்வே செய்வோம், கோழி வாங்கி அறுக்கிறதுல இருந்து ஆக்கி முடிக்கிற வரைக்கும் ,படம் எடுத்து பதிவு போட்டால் தான் சரியா வரும்னு நினைக்கிறேன்!
சிக்கன் 65 செய்வது எப்படி,சொறாப்புட்டு செய்வது எப்படினு பதிவ போட்டு "நானும் சமையல் கலையை" கலக்கி காட்டுறேன்,அப்போ தெரியும்!!!
#//மிஸ்டர் வழக்கமான சமையல் இருபது வருஷத்துக்கு மேல சமைக்கிற அனுபவம் உண்டு. //
ஹி...ஹி உங்க வயசே 20 தான் இருக்கும்னு நினைச்சுட்டு சொல்லிட்டேன், நீங்க ஒரு பழம்பெரும் சமையல் கலைஞரா அப்போ!
ஆனாலும் உங்க குடும்பத்தில எல்லாருமே "ரொம்ப்ப நல்லவய்ங்களா" இருப்பாங்க போல,20 வருஷமா நீங்க சமைக்கிறத பொறுத்து போவதில இருந்தே தெரியுது!!!
#//புத்தகத்தில போட்டத அப்படியே அப்படியே காப்பி அடிக்கிற பழக்கம் எனக்கு கிடையாது. அந்த அவசியமும் கிடையாது. நான் பயன்படுத்தற வார்த்தையதான் எழுதவும் முடியும்.//
நீங்க ஒரு பழம்பெரும் சமையல் கலைஞர் என்பதால் "புத்தக மொழியே வழக்கு மொழியாக "பழகி வந்துடுச்சு போல,நமக்கெல்லாம் இன்னும் சீனி,சக்கரை, காய்ஞ்ச மொளகா தான்!
அதை முதல்ல செய்யுங்க சாமி, என்னை ஆள விடுங்க
ReplyDelete