Wednesday, March 5, 2014

இந்த அற்புதத்தை அழிவு சக்தி மோடியால் எப்போதும் நிகழ்த்த முடியாது.



ரத்தம் ஓடிய பூமியில் மனித நேயம் எனும் ரோஜா மலர்ந்து அன்பெனும் வாசத்தை பரப்பிய அற்புத நிகழ்வு இது. இந்த நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே சாத்தியம். மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி விடும் மோடி போன்றவர்களால் இது போன்ற ஒற்றுமையை எந்நாளும் உருவாக்க முடியாது. ஆம் அழிவு சக்திகளுக்கு என்றும் ஆக்க பூர்வமாக சிந்திக்கவும் தெரியாது. செயல்படவும் முடியாது.

கத்தி தூக்கியவரும், கை கூப்பியவரும் சந்தித்த போது...

குஜராத் கலவரத்தை தொடர்ந்து இரண்டு புகைப்படங்கள் ஊடகங்கள் அடிக்கடி பிரசுரிப்பதை எவரும் மறந்திட முடியாது, எல்லோர் மனதிலும் ஆழமாக பதிந்த அந்த இரண்டு சித்திரங்கள்

ஒன்று - கலவரத்தின் கொடூரத்தில் கைகூப்பி உயிர் பிச்சை கேட்டு, சோகத்தின் உச்சத்தை உலகத்திற்க்கு உணர்த்திய குத்புதீன் அன்சாரி,

மற்றொன்று - ஆக்ரோசத்துடன் உருவிய வாளுடன் கலவரத்தை மோடியின் தலைமையில் முன்னின்று நடத்திய அசோக் மோச்சி,




ஆனால் இன்று அசோக் மோச்சி செய்த குற்றத்திற்க்காக மனம் வருந்திய நிலையில் மனிதநேய பாதையில் தன்னை அர்பணித்துள்ளார். கேரளாவில் சிபிஎம் நடத்திய கருத்தரங்கில் குத்புதீன் அன்சாரியை அசோக் மோச்சி தோளில் கட்டியனைத்து கவிதை கூறியதும் மக்கள் அனைவரின் கண்கள் கலங்கியது.






கண்ணூரில் அரங்கையே நெகிழ வைத்த அந்த அற்புத நிகழ்ச்சியில், குத்புதீன் அன்சாரிக்கு கைகொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் அசோக் மோச்சி.

கண்ணூர், மார்ச் 4 –


அது மனிதநேயத்தின் ஒரு அபூர்வ சங்கமம். மனிதநேயம் மறுபிறவிஎடுத்த நேரம். அசோக் மோச்சி தனது கையில் இருந்தபாட்டிலிலிருந்து சிறிது   தண்ணீரை குத்புதீன் அன்சாரிக்கு வழங்குகிறார்.

தண்ணீரைக் குடிக்கும்போதே அன்சாரி தன் கையில் இருந்த பன்னீர்ப்பூவை மோச்சியிடம் கொடுக்கிறார்.குஜராத்தில் இனப்படுகொலை அரங்கேறிய பூமியில் இருந்து வந்த இவர்கள் இருவரும் ஒரு தாய் மக்களாக -  சகோதரர்களாக அன்பைப் பரிமாறிக் கொண்டபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கரகோஷம் எழுப்பினர்.மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஒருமைப்பாட்டின் புதிய அத்தியாயத்தை நெய்தார்கள் தையல்காரரான அன்சாரியும் செருப்புத் தைப்பவரான மோச்சியும்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பில் 18 கலை - இலக்கிய அமைப்புகள் கூட்டாககுஜராத் இனப்படுகொலையின் 12 ஆண்டுஎன்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தின. இக்கருத்தரங்கில்தான் குஜராத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கலவரத்தின் போது கூரியவாளுடன் கொலைவெறிக் கூச்சலிட்டவரும் அதைக் கண்டு நடுநடுங்கி உயிர்ப்பிச்சை கேட்டவரும் பரஸ்பரம் சந்தித்த நிகழ்ச்சி அரங்கேறியது.

ஆர்எஸ்எஸ்காரர்களின் கொலைக்கத்தி யிலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளர் பி.ஜெயராஜன், முஸ்லிம் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்த நேரத்தில் ஆர்எஸ்எஸ் காரர்களால் படுகொலை செய்யப்பட்ட வீரத்தியாகி யு.கே.குஞ்ஞிராமனின் நான்குபெண் குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கலவரப் பூமியில் உயிருக்காக யாசித்த கூப்பிய கைகளும் வாள் ஏந்திய கைகளும் கைகோர்த்த போது வெறுப்பின் - பகைமை யின் தத்துவ சாஸ்திரங்கள் காற்றில் பறந்தன.

அன்சாரியின் உருக்கம் : “நான் வந்திருப்பதை அறிந்துஏராளமானோர் என்னைப் பார்க்க வந்திருக் கிறீர்கள். யார் இந்து, யார் முஸ்லிம் என்றுஎன்னால் பிரித்துப் பார்க்க முடிய வில்லை.

கேரள மக்களிடம் கொண் டுள்ள அன்பினால்தான் இந்த மேடைக்கு வெள்ளை முண்டு உடுத்தி வந்திருக் கிறேன். குஜராத்திலிருந்து ஓடியபோது மேற்குவங்கத்திலும் என்மீது அன்பு காட்டப் பட்டது.கேரளத்தின் இந்தத் தொடக்கம் இந்தியாவில் மாற்றத்திற்கான கதவைத் திறக்கட்டும். குஜராத்தை இப்போது அடக்கிஒடுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்திருப்பது நரேந்திர மோடி தில்லி செல்வதற்காகத்தான். அன்று தெருவில் கொலைக் கூச்சலிட்ட அசோக் மோச்சி மீது எனக்கு இதயம் நிறைந்த அன்பு மட்டுமே உள்ளது.

அவர்கள் இவரைப் பயன் படுத்தினார்கள் என்று கூறிய அன்சாரி, “முதலில், மனிதன் என்ற கடமையை நிறை வேற்றுங்கள். அதன்பின்னர் கீதையையும் குர்ஆனையும் திறங்கள்என்ற கவிதை வரிகளை உச்சரித்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.

காந்தியின் குஜராத் : “மோடியின் குஜராத்தில் இருந்து அல்ல, மகாத்மா காந்தியின் குஜராத்தில் இருந்துதான் நான் வருகிறேன். உங்களுடன் பேசுவதற்கு எனக்கு மொழி தெரியாது.

ஆனால், மனிதநேயத்தின் மொழிக்கு சுருதிதேவையில்லை. குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்று டமாரம் அடிக்கப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட வளர்ச்சி எதுவும் இல்லை என்பதற்கு நான் இப்போதும் தெருவில் செருப்புத் தைப்பவனாக வாழ்ந்து கொண்டிருப்பதே எடுத்துக் காட்டாகும். பணம் இல்லாததால் திருமணம் கூட செய்யவில்லைஎன்று மோச்சி கூறினார் .“என்னை நானே கொள்ளையடித்தேன். பின்னர் நீங்கள் என்னை எப்படி கொள்ளை யடிக்க முடியும்அன்சாரியை அருகில் நிறுத்தி  பொருள் பொதிந்த கவிதை சொன் னார் மோச்சி.

இந்த சங்கம நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு உறுப்பினர் டி.கே.ஹம்சா.சஹீத் ரூமி எழுதியநான் குத்புதீன் அன்சாரிஎன்ற புத்தகத்தை யு.கே.குஞ்ஞிராமனின் மகள்கள் கே.சத்யபாமா, கோமளா, நீத்தா, சுஜாத்தா ஆகியோருக்கு வழங்கி வெளியிட்டார் .பி.ஜெயராஜன். இந்த புத்தகத்தை சிந்தா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.

-
தேசாபிமானியிலிருந்து : வீரா


நன்றி தீக்கதிர் நாளிதழ் 05.03.2014

மற்றும் தோழர் கவின் மலர் அவர்களின் முக நூல் பக்கம்



1 comment:

  1. தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

    http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete