Wednesday, March 26, 2014

மோடி பாசத்தால் வெளியான ஜெயலலிதாவின் மொக்கை பதில்



பாரதீய ஜனதாவைப் பற்றியோ அல்லது நரேந்திர மோடியைப் பற்றியோ தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஏன் ஜெயலலிதா வாய் திறப்பதேயில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக ஒரு வழியாக பதில் சொல்லியுள்ளது.

ஆனால் அந்த பதில் மிகவும் மொக்கையாக இருக்கிறது.

மத்தியில் இருப்பது காங்கிரஸ் அரசுதான். ஆகவே அதைத் தான் எதிர்க்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநில முதல்வர் பற்றி ஏன் பேச வேண்டும் என்று அம்மையார் கேள்வி கேட்டுள்ளார்.

அந்த குஜராத் மாநில முதல்வர்தான் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக முன் வைத்து நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வது அம்மையாருக்கு தெரியாது போலும். பாஜக போட்டியிடுவதும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கத்தான் என்பதும் கூட அம்மையார் அறியவில்லை போலும்.

கதர்க்காரர்களையும் காவிக்காரர்களையும் சம தூரத்தில் நிறுத்தி உள்ளதாக சொல்கிறார். நம் கேள்வியே அதுதான். சம தூரத்தில் உள்ள இருவரில் கதர்க்காரர்களை வறுத்து எடுக்கும் போது காவிக்காரர்கள் பற்றி மட்டும் ஏன் வாய் திறக்கவேயில்லை?

மோடி மீதுள்ள பாசம், ஒரு வேளை தேவைப்பட்டால் அவருக்கு முட்டு கொடுப்பது என்பதுதான் காரணம். ஜெ வின் மொக்கை பதில் இதை நிரூபிக்கிறது.

இந்த அறிக்கையின் காமெடியான விஷயமே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் விஜயகாந்த் பற்றி வாய் திறப்பதில்லை என்று ஜெ கேட்டதுதான்.

அவர் கண்டிப்பாக படிப்பார் என்று உறுதி கொடுத்தால் என் சொந்த செலவிலேயே அவருக்கு தீக்கதிர் சந்தா கட்டி விடுகிறேன். அதைப் படித்த பின்பாவது ஜெ விற்கு தெளிவு கிடைக்கட்டும்.

2 comments:

  1. ஜெயலலிதா கம்யூனிஸ்ட் கட்சி பற்றிக் கூட ஒன்றும் சொல்வதில்லை என்பதால் நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே எழுதுங்கள்.. நாளை எலக்ஷன் முடிந்த பிறகு இருவரும் ஒரே கூட்டணியில் வந்துவிட்டால் அவரை பற்றி நீங்கள் எழுதுவதை நிறுத்தினால் அவ்வளவு நன்றாக இருக்காது!

    ReplyDelete
  2. பந்து சார் அதிமுக அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த பதிவே. மேலும் ஜெ வோடு உறவு இருந்த போதும் அவரது பல நடவடிக்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்தியுள்ளது, நானும் எழுதியுள்ளேன். தா.பா போல சி.பி.எம் இல்லை என்ற வருத்தம் அவருக்கு உண்டு.

    ReplyDelete