Sunday, March 2, 2014

அந்த அதிகாரிகள் நியாயமாக நடந்து கொண்டிருப்பார்களா?

சர்ச்சைக்குரிய முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் 
பாஜகவில் இணைந்து விட்டார். மும்பை போலீஸ் 
கமிஷனர் சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் 
இணைந்தார். இன்னும் சில முன்னாள், இந்நாள்
அதிகாரிகள் கூட  தேர்தல் நெருக்கத்தில்  ஏதாவது
ஒரு கட்சியில் இணைந்து  தாங்கள் மக்கள் சேவை
ஆற்றப்போவதாக அறிவிக்கலாம்.

முன்பு திரை நட்சத்திரங்களுக்கு வலை வீசியவர்கள்
இப்போது உயர் அதிகாரிகளுக்கு வலை வீசுகிறார்கள்.
அவர்கள் பணியில் இருக்கும் போதே பேரங்கள் 
நடந்திருந்தால் மட்டுமே, அவர்கள் பணி ஓய்வு
முடிந்த உடனேயோ அல்லது விருப்ப ஓய்வு 
கொடுத்து விட்டோ ஒரு கட்சியில் இணைவது
சாத்தியம்.

இப்படிப்பட்ட நிலைமை இருக்கும் போது  பணியில்
இருக்கும் போது அவர்கள் எடுக்கும் முடிவுகள் 
சார்புத்தன்மை இல்லாமல் நேர்மையாக இருக்க
முடியும்? அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள
விரும்பும் கட்சிக்கு ஆதரவாகத்தானே இருப்பார்கள்?

தேர்தல் ஆணையத்திற்கு இது பற்றி ஏதாவது கருத்து
உண்டா?

2 comments:

  1. எல்லாம் மக்களுக்கு சேவைதான் போலும்!ஹீ

    ReplyDelete
  2. //முன்பு திரை நட்சத்திரங்களுக்கு வலை வீசியவர்கள்
    இப்போது உயர் அதிகாரிகளுக்கு வலை வீசுகிறார்கள்.//

    தாங்கள் கூட்டணிய்ல் சேரப்போகும் நபர் நடிக்கத் தெரியாத அப்பாவியா.

    கோபாலன்

    ReplyDelete