Wednesday, March 12, 2014

நம் உயிரோடு விளையாடும் விஷம் தடவிய விதைகள்



மேலே உள்ள படம் இன்று முகநூலில் பார்த்தது. பன்னாட்டு விதை நிறுவனமான மாண்சாண்டோ உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பும் விதை மூட்டைகளில் பின்வருமாறு கொட்டை எழுத்துக்களில் அச்சிட்டுள்ளது.

எச்சரிக்கை : இந்த விதைகள் விஷத்தால் பதப்படுத்தப்பட்டவை. உட்கொள்வதற்கோ, தீவனமாக அளிப்பதற்கோ, எண்ணெய் எடுப்பதற்கோ உகந்தது இல்லை.

இந்த எச்சரிக்கை அந்த விதை மூட்டைகளில் உள்ளது. அப்படி விஷம் தடவிய விதையை விதைத்தால் பயிராகும் தானியத்தில் அந்த விஷத்தின் பாதிப்பு இருக்காதா? விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, விஷத்தை விதைத்தால் அமுதமா பயிராகும்? விளை பொருளும் விஷமாகத்தானே மாறும்?

விதைகளை பூச்சிகள் அரித்து விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு விஷம் தடவப்பட்டுள்ளது என்றும் அந்த விஷத்தின் தாக்கம் பயிரில் தென்படாது என்ற விளக்கம் ஒன்றையும் பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்பதை வேளாண் ஞானம் உள்ளவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

விஷம் தடவிய விதைகள் மண்ணுக்குள் செல்கிற போது மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக நச்சு கலந்ததாக மாறி விடாதா? நச்சு கலந்த மண்ணில் உற்பத்தியாகும் பொருளில் மட்டும் நச்சு இருக்காதா?

மாண்சாண்டோ போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளின் விதைகளை தடை செய்வது மட்டுமே இந்திய விவசாயத்தையும் இந்திய மக்களின் உயிரையும் பாதுகாக்கும்.

மாண்சாண்டோ போன்ற பன்னாட்டு அரக்கர்கள் தழைத்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில். அவர்கள் இந்தியாவில் நுழைய அனுமதி வழங்கியது வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் ஆட்சிக்காலத்தில்.

இருவரையும் வீழ்த்துவதே இந்திய மக்களின் இன்றைய கடமை.

5 comments:

  1. அதெல்லாம் யாருங்க பார்க்குறது!?

    ReplyDelete
  2. அய்யா,

    //விதைகளை பூச்சிகள் அரித்து விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு விஷம் தடவப்பட்டுள்ளது என்றும் அந்த விஷத்தின் தாக்கம் பயிரில் தென்படாது என்ற விளக்கம் ஒன்றையும் பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்பதை வேளாண் ஞானம் உள்ளவர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.//

    சமையல் கலையில் மட்டும் தான் ஞானம் உண்டாகி இருக்கும் போல அவ்வ்!

    விதைக்கு சீட் டிரீட்மெண்ட் ஆக கொடுக்கப்பட்ட விஷத்துக்கே பயிரில் வராதானு கேட்கிறிங்களே ,விதைச்ச பின் அறுவடை வரைக்கும் எத்தனை முறை பூச்சி மருந்து அடிக்கிறாங்க அதெல்லாம் கணக்கில சேர்க்கலையா?

    விதைகளை சேமிக்கும் போது ,பூச்சி ,பங்கஸ் தாக்காமல் இருக்க ,விதை நிறுவனங்கள் அளிக்கும் சிகிச்சை தான் ,உறையின் மேல போட்டிருப்பது.

    அதெல்லாம் மண்ணோடு மண்ணா மக்கிப்போயிடும், மனுசனுக்கு ஒன்னும் ஆகாதுனு நம்பித்தான் சாப்பிட்டாவணும், இயற்கையா விளைய வச்சா அதுக்கான "நியாயமான விலை"கொடுக்க யாருக்கு மனசு இருக்கு?

    என்னது ஒரு கீரைக்கட்டு அஞ்சு ரூவாயா, 4 ரூவாக்கு கொடுனு , கீரை விக்கிற கிழவிக்கிட்டே பொருளாதாரம் பேசிட்டு, மல்டிப்பிளக்சில் 120 ரூக்கு டிக்கெட் கொடுத்து படம் பார்த்து ,ஹீரோ படுற கஷ்டத்துக்கு கண்ணீர் விடுவோம்ல அவ்வ்!

    விதைக்கும் போது இன்னும் சில ஃபங்கிசைட், பூச்சி மருந்து எல்லாம் கலந்து சீட் டீரிட்மெண்ட் செய்தப்பின்னரே விதைப்பார்கள். அதை எல்லாம் செய்ய சொல்லி ,கத்துக்கொடுப்பதே அரசு வேளாண் அதிகாரிகள் தான் அவ்வ்!

    மேலும் எறும்பு மருந்து எனப்படும் 2-4 டி லின்டேன் என்ற மருந்து தூளை வேறு கலந்து விதைப்பார்கள், இல்லை எனில் ,விதை முளைக்கும் முன்னரே எறும்பு வந்து விதையை மேஞ்சிடும் :-))

    அப்படி விளைவிச்ச "காலிஃபிளவரைத்தான் வாங்கி நீங்க புலாவ் செய்து "சமையல் கலைஞர்னு" சொல்லிக்கிறீங்க :-))

    உங்களுக்கு இன்னொரு சந்தோஷமான செய்தி என்னவெனில் ,காலிப்ளவர் அறுவடை செய்த பின்னர் ,ஒரு தொட்டியில பூச்சி மருந்து கலந்து வச்சிருப்பாங்க ,அதுல முக்கி எடுத்து தான் மூட்டைக்கட்டுவாங்க, ஏன் எனில் சில பூச்சிகள் காலிப்பிளவரில் முட்டை வைத்திருக்கும், விற்பனைக்கு எடுத்து வருவதற்குள் முட்டை பொறித்து ,புழுவாகி , வர வழியிலே காலிப்ளவரை காலி செய்துடும்,அதை தடுக்கவே :-))

    காலிப்ளவர் புலாவ் நல்லா டேஸ்ட்டா இருக்க காரணம்,அதுல இருக்க பூச்சி மருந்தும் தான் :-))

    ஒரு டிப்ஸ்,
    "உப்பு கலந்த தண்ணியில சுமார் அரைமணி நேரம் ஊற வச்சு கழுவினா " ஒட்டிக்கிட்டு இருக்க பூச்சி மருந்தின் விளைவு குறையும்"

    #//இருவரையும் வீழ்த்துவதே இந்திய மக்களின் இன்றைய கடமை.//

    காமெடி செய்யாதிங்க, அப்போ செவப்புத்துண்டு கட்சிக்கு அந்த கடமைலாம் இல்லையா? ரொம்ப நாளா பன்னாட்டு விதை நிருவனங்களை தொறத்துறோம்னு சொல்லியே, இப்போ 100 சதவீதம் பன்னாட்டு விதைகளை பயன்ப்படுத்த வச்சவங்களாச்சே :-))

    பி.டி விதைகள் பரவலானதைப்பத்தி விலாவாரியா பதிவு கூட போட்டிருக்கேன் ,அதை படிச்சிருந்தாக்கூட ,இந்த விதை அரசியல் புரிஞ்சிருக்கும் அவ்வ்!

    நடிகைகள் படத்த போட்டு வளவளனு தான் எழுதியிருப்பேன் :-))

    # http://vovalpaarvai.blogspot.in/2013/10/bt-cotton.html

    # http://vovalpaarvai.blogspot.in/2013/11/bt-cotton-2.html

    ReplyDelete
  3. காலிப்ளவரை எப்போதும் உப்பு கலந்த சுடுநீரில் ஊற வைக்க வேண்டும் என்பது பால பாடம் ஐயா. இது கூட தெரியாமல் எப்படி சமைப்பார்கள்? அவ்வ்

    ReplyDelete
  4. மாண்சாண்டோ நிறுவனத்தின் முந்தைய பெயரான கார்கில் நிறுவனத்தை அனுமதிக்கக் கூடாது என்பதற்காக பெங்களூரில் இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் கே.வி.ஸ்ரீனிவாசன் காவல்துறை தடியடியில் காயப்பட்டு, பஅதனால் அவருக்கு மாரடைப்பு வந்து அந்த நெஞ்சு வலியோடே கைது செய்யப்பட்டு அதன் விளைவாக ஒரு மாத காலத்தில் அவர் இறந்து போனார். திரு வவ்வால் அவர்களே இடதுசாரிகளின் தியாகத்திற்கு இது ஒரு உதாரணம். தயவு செய்து இதனை கொச்சைப்படுத்தாதீர்கள்

    ReplyDelete
  5. அய்யா,

    பரவாயில்லையே ,வேகமா பதில் எல்லாம் சொல்றிங்க!!!

    காலிப்ளவருக்கு சுடு உப்புத்தண்ணி குளியல் செய்யாத சமையல் கலைஞர்னு உங்களை நினைப்பேனா, நான் சொன்னது பொதுவாக எல்லா காய்களுக்குமே.

    ஏன் எனில் உப்பு ,சோடியம்,குளோரைடு என அயனிகளாக பிரிந்து பூச்சி மருந்தின் அயனிகளை சமப்படுத்திவிடும்.

    மாம்பழங்கலை கால்சியம் கார்பைடு கல் போட்டு பழுக்க வைப்பார்கள்,அதற்கும் மாம்பழங்களை உப்புத்தண்ணீரில் ஊற வச்சு நீக்கலாம். உங்க ஏரியாவில இனிமே பங்கனப்பள்ளி மாம்பழம் சல்லீசா நடமாடுமே ,சீசன் வருதே.

    இன்னொன்னு வினிகரை தண்ணீரில் கலந்து கழுவ சொல்வாங்க,ஆனால் அது எந்த அளவுக்கு பலன் என தெரியலை.

    # ரீபைண்ட் சமையல் ஆயில் எப்படி தயாரிக்கிறாங்கனு சொன்னா அதுக்கு அப்புறம் ,சமையலே செய்ய மாட்டிங்க அவ்வ்!

    எல்லாம் சால்வண்ட் எக்ஸ்ட்ராக்‌ஷனில் ,ரசாயணத்தில் கரைச்சு எண்ணையாக்கி எடுப்பது. அதுக்கு அப்புறம் செயற்கை மணம், நிறம் வேற சேக்கிறாங்கலாம் :-))
    --------------------

    #//அகில இந்திய துணைத்தலைவர் தோழர் கே.வி.ஸ்ரீனிவாசன் காவல்துறை தடியடியில் காயப்பட்டு, பஅதனால் அவருக்கு மாரடைப்பு வந்து அந்த நெஞ்சு வலியோடே கைது செய்யப்பட்டு அதன் விளைவாக ஒரு மாத காலத்தில் அவர் இறந்து போனார். திரு வவ்வால் அவர்களே இடதுசாரிகளின் தியாகத்திற்கு இது ஒரு உதாரணம். தயவு செய்து இதனை கொச்சைப்படுத்தாதீர்கள்//

    போராட்டத்தில் இறந்த அன்னாருக்கு அனுதாபங்கள்!

    கொச்சைப்படுத்த வேண்டும் என சொல்லவில்லை, ஆனால் போராடுகிறோம் என சொல்லிக்கொண்டு தான் உள்ளீர்கள்,ஆனால் ஒன்னும் நிக்கலையே,இன்னிக்கு இந்தியாவில் 95% விதைகள் பன்னாட்டு கம்பெனிகளின் கையில்.

    முழுமையான எதிர்ப்பாக இல்லாமல் ஒரு டோக்கன் ஸ்ட்ரைக் போல தானே ஒரு நாள் போராடிவிட்டு அம்போனு விட்டுவிடுகிறார்கள்.

    அரசியல் இயக்கங்கள் அனைத்தையும் அரசியலாகவே பார்க்கிறார்கள், எதுவும், முடிவை தருவதேயில்லை.

    ReplyDelete