Monday, November 4, 2013

கனியிருக்க வெறும் கல் எதற்கு மிஸ்டர் Jeya MOhan?

முக நூல் முழுக்க இன்று ஜெய மோகனின் புராணம்தான்.

தமிழ் எழுத்துருவே அவசியமில்லை என்றும் தமிழை
ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதி விடலாம் என்று
மிக அற்புதமான ஆலோசனையை அண்ணன் ஜெய மோகன்
சொல்லியுள்ளார். 

தமிழ் தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் இப்போது ஏற்கனவே
அது போல முக நூலில் செய்து கொண்டு கொஞ்ச நஞ்சம்
தமிழையும் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதையே தாங்க முடியவில்லை.

அப்படி இருக்கையில் இவர் ஒட்டு மொத்தமாக மாறச் 
சொல்வது என்பது அபாயகரமானது. அபத்தமானது.

மலையாளப் படத்திற்கு வசனம் எழுதுவதால் தமிழை
அழிக்க புறப்பட்டுள்ளாரா?

இல்லை நேற்று அமாவாசை என்பதால்  அதன் பாதிப்பு
இன்னும் இருக்கிறதோ?

திருவள்ளுவர் சொன்னதை நினைவு படுத்துகிறேன்.

கனியிருக்க காய் கவந்தற்று.

இனிய தமிழ் எழுத்துக்கள் இருக்கையில் அதை எழுத,
தட்டச்சு செய்ய தொழில் நுட்பம் இருக்கையில் 
இந்த பைத்தியக்கார ஆலோசனையெல்லாம் எதற்கு
மிஸ்டர் jeya MOhan? 

18 comments:

  1. வணக்கம்
    அருமையாக சொன்னிர்கள் .... பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //இந்த பைத்தியக்கார ஆலோசனையெல்லாம் எதற்கு
    மிஸ்டர் jeya MOhan?//

    நல்ல கேள்வி

    ஜெயமோகனின் எதிர்வீட்டுக்கார்ர், ஜெயமோகனுடைய அப்பாவின் முகமூடியை அணிந்து கொள்ளட்டும்.

    ReplyDelete
  3. எல்லாம் ஆங்கில மோகமும் அடிமை மனப்பான்மையும் தான் காரணம்.
    தமிழகத்தில் உள்ள ஆங்கில மோகத்தை பாவித்து செய்யும் அபாயகரமான செயல் இது.
    ஜெய மோகன் பரதேசிபடத்திற்கு வசனம் எழுதியவர் தானே?

    ReplyDelete
  4. இனி மெல்ல சாகும் தமிழ் என்ற பாரதியின் வாக்கின் படி அதற்கு முதல் கல்லை எறிகிறார் போல ஜெயமோகன் ?

    ReplyDelete
  5. உச்சரிப்புக்கு மட்டும் தமிழ் எதுக்கு, அதையும் சேத்து மொத்தமா ஆங்கிலத்துக்கு மாத்த வேண்டியதுதானே. இவரெல்லாம் ஒரு "தமிழ் எழுத்தாளர்", அத படிக்குறதுக்கும் ஒரு கூட்டம், நாடு உருப்ட மாதிரிதான்.

    ReplyDelete
  6. எனது நண்பர் ஒருவர் தீபாவளிக்கு தமிழக தொலை காட்சியில் தமிழ் எவ்வளவு கேவலபடுத்தபடுகிறது பார் என்று ஒரு இணைப்பு அனுப்பியிருந்தார்.
    http://www.dailymotion.com/video/x16p7p8_ugv-saindhavi-part-1_shortfilms?start=28
    வேறு நாட்டுகாரர்கள் யாராவது தொலைகாட்சியில் தங்கள் சொந்த பாஷையை இப்படி அவமானபடுத்துவார்களா? தமிழகத்தில் ஜெயமோகன் திட்டத்துக்கு பலத்த ஆதரவு கிடைக்கும்.

    ReplyDelete
  7. ரஸீம் கஸாஸி தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்த கண்டனம் சற்று மிகையாக பட்டாலும் இந்த மாதிரியான ஆட்களுக்கு இது தேவை தான் என்று தான் படுகின்றது.

    ReplyDelete
  8. ஒரு இடதுசாரி தோழர் தளத்தில் சொந்த மொழியை அவமானபடுத்துவதற்காக கடும் எதிர்பு.அருமை. நன்றி தோழர் பெரியவர் இராமன்

    ReplyDelete
  9. திரு வேகநரி, பெரியவர் என்று ஏன் சொல்லியுள்ளீர்கள் என்று புரியவில்லை. மேலும் இடதுசாரிகள் மொழியை நேசிப்பவர்கள், தமிழ் வளர்ச்சியில் இடதுசாரிகளுக்கும் பங்கு இருக்கிறது

    ReplyDelete
  10. நண்பர் ’கோபி’யின் கவனத்திற்கு......

    “மெல்லத் தமிழினிச் சாகும் என்றொரு பேதை உரைத்தான்...” என்றுதான் பாரதி சொன்னார்.

    ReplyDelete
  11. எப்படியும் அவர் ஒரு மலையாளி தானே!, இயல்பாகவே அந்த தமிழ் வெறுப்பு, அழிப்பு இருக்கத்தான் செய்யும்.
    இவரையும் மேதாவி என ஒரு கூட்டம் கொண்டாடுகிறது.

    ReplyDelete
  12. காமக்கிழத்தன் - சரியான வரிகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  13. Indha Padhivai padithu karuththu sonna nalla uLLangal EllOrukkum mikka nandriai urithakkugiren

    ReplyDelete
  14. ஒரு வரி கூட எழுத முடியவில்லை. இதுவே எல்லோமும் என்றால்?
    ஜெயமோகன் நிச்சயம் ஒரு தமிழ்த் துரோகி

    ReplyDelete
  15. //பெரியவர் என்று ஏன் சொல்லியுள்ளீர்கள் என்று புரியவில்லை//.
    நீங்க ஒரு தொண்டர் இல்லை தலைவராயிருக்க வேண்டும் என்று நினத்தேன். அத்துடன் ஒரு மதிப்பும் ஏற்பட்டதால் பெரியவர் என்றேன்-

    ReplyDelete
  16. What's wrong with Jeyamohan's statement? He's 100% correct. You TAMILIANS are ultimate IDIOTS. You bloody TAMILIANS always react like BEASTS. Cultureless MORONS.

    ReplyDelete
  17. ஆங்கிலத்தில் எழுதியுள்ள அனானி, நீ தமிழ் படித்துத்தான் ஆங்கிலத்தில் கமெண்ட் எழுதியுள்ளாய். அதனால் உனக்கு தமிழிலேயே பதில். அதையும் படித்து விட்டு மீண்டும் ஆங்கிலத்தில் எழுது. நீ எந்த மாநிலத்துக்காரன் என்று நான் ஆராயப் போவதில்லை. உங்கள் மாநிலத்துக்காரர்களும் முட்டாள்கள், வெறி பிடித்தவர்கள், கலாச்சாரம் இல்லாத மனநிலை குன்றியவர்கள் என்று வசை பாடப் போவதில்லை. தமிழ் மொழியின் கலாச்சாரத்தையும் பெருமையையும் மட்டுமல்ல தமிழ் மொழியையே அழிக்க நினைக்கும் ஜெயமோகன் போன்ற சூழ்ச்சிக்காரர்களுக்கு வக்காலத்து வாங்கும் முன்பு அந்த பெரிய மனிதன் சொன்னதை உனது மொழிக்கு பொருத்திப் பார். பிறகு வந்து இங்கே பேசு

    ReplyDelete