Saturday, November 9, 2013

இளையராஜாவால் எப்போதுமே எனக்கு டென்ஷன்தான்




ரேடியோஸ்பதி என்ற இணைய தளம் உள்ளது. எனக்கு மிகவும் பிடித்த தளமும் கூட. அந்த தளத்தின் சிறப்பம்சமே திரை இசை பற்றிய பகிர்வுகள், நல்ல பாடல்களின் காணொளிக் காட்சிகள் ஆகியவை அடங்கியது இத்தளம். எல்லாவற்றையும் மிக மிக முக்கியமானது பல்வேறு திரைப்படங்களில் இசைஞானி இளையராஜா அமைத்துள்ள பின்னணி இசையை மட்டும் தனியாக பிரித்தெடுத்து  அளித்திருப்பது என்பதுதான்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் அந்த தளம் பக்கம் செல்லவில்லை. இன்று காலையில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு குளிக்க  கிளம்பும் முன்னால் புதிதாக ஏதாவது பின்னணி இசை உள்ளதா என்று பார்க்கப் போனேன். புதியதாக எதுவும் இல்லாவிட்டாலும் சரி என்று வரிசையாக நாயகன், மௌன ராகம் என்று ஒவ்வொரு காட்சிக்கான பின்னணி இசையைக் கேட்டுக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

பிறகு அவசரம் அவசரமாக குளித்து, அள்ளிப் போட்டு சாப்பிட்டு, வேகமாக பத்து மணிக்கு முன்பாக அலுவலகம் வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.  இன்று மட்டுமா? சில சமயங்களில் முகநூலில் லாக் அவுட் செய்து வெளியே வர நினைக்கும் போதுதான் யாராவது ராஜாவின் நல்ல பாடல் ஒன்றின் காணொளி இணைப்பை கொடுப்பார்கள். அந்த பாடல், அடுத்த பாடல் என்று நேரம் ஓடுவதே தெரியாது. நிதானமாக அலுவலகம் புறப்படுவது என்பது இயலாமல் போய் விடும்.

என்ன செய்வது ராஜாவின் இசை காந்தம் போல கவிர்ந்திழுக்கிறதே.

இதோ அந்த தளத்தின் இணைப்பை அளித்துள்ளேன். நீங்களும் பார்த்து இல்லையில்லை கேட்டும் ரசியுங்கள். இதோ இந்த பதிவின் மூலமாக கானா பிரபாவிற்கு ஒரு அன்பு வேண்டுகோள்.

காதலுக்கு மரியாதை படத்தின் பின்னணி இசை கோர்வைகளை வெளியிடுங்கள். அதிலும் மீனவர் கிராமத்தில் திருமண ஏற்பாடுகள் போதும் உச்சகட்டத்தின் போதும் பின்னணியில் ஒலிக்கும் இசையினை ரசிக்காதவர்கள் யாராவது உண்டா? அதிலும் உச்சகட்ட காட்சியில் ஸ்ரீவித்யா, ஷாலினி அம்மாவோடு பார்ப்பவர்களின் பதட்டத்தை  அதிகரித்ததில் ராஜாவிற்கும் பங்கு உண்டே! அதே போல் சுபமாக முடிந்ததும் அந்த சுகமான உணர்வை அப்படியே நமக்கும் ஊட்டியது ராஜாதானே!

பின் குறிப்பு : இங்கே உள்ள இசைஞானியின் படத்தை வரைந்தது
எங்களது செய்யாறு கிளையில் பணியாற்றும் தோழர் ஜே.சுரேஷ்

13 comments:

  1. You Too Comrade? Very Nice! I thing We are in the Same wavelength!

    ReplyDelete
  2. நீங்க சொன்ன படங்களைபற்றி தெரியாவிட்டாலும் கட்டுரையை இரசித்தேன்.அருமையா இளையராஜாவை பற்றி சொல்லியிருக்கிங்க. திரு சுரேஷ் வரைந்த இளையராஜா படம் அருமை. என் உறவினர் நண்பர்கள் வெளிநாடு உட்பட ஒரு இளையராஜா படை அணிவைச்சிருக்காங்க. அதில் ஒரு நான்கு வயது சிறுமியும் உண்டு.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. உங்களுக்கு tension கொடுத்த ராஜாவின் இசை vanஇல் ஆஃபீஸ் செல்லும் எங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு relaxation.


    ReplyDelete
  4. அருமை நண்பா, ஒத்த அலைவரிசையில் இயங்குகிறோம். கண்டிப்பாக நீங்கள் கேட்டதைக் கொடுப்பேன்.

    ReplyDelete
  5. அருமையான ஓவியம்..இளையராஜாவின் உயிர் ஓவியத்தில் அப்படியே உள்ளது...

    ReplyDelete
  6. இளையராஜாவின் ஓவியமும் அழகு .உங்களின் ராசவின் இசை ரசனையும் அழுகு சகோ!

    ReplyDelete
  7. என்னையும் உங்க கூட சேர்த்துக்குங்க பாஸ் ...........

    ReplyDelete
  8. என்னையும் உங்க கூட சேர்த்துக்குங்க பாஸ் ...........

    ReplyDelete
  9. என்னையும் உங்க கூட சேர்த்துக்குங்க பாஸ் ...........

    ReplyDelete
  10. என்னையும் உங்க கூட சேர்த்துக்குங்க பாஸ் ......

    ReplyDelete
  11. அருமையான பதிவு

    ReplyDelete