Saturday, March 8, 2025

கண்ணப்பர் கதை தெரியுமா காவிக்கயவர்களுக்கு?

 



பன்றிக்கறிக்காக சிவபெருமான் அர்ஜுனன் சண்டை போட்ட காதையை  இரண்டு நாட்கள் முன்பு எழுதியிருந்தேன். அதை விட ஸ்பெசல் ஐட்டம்  ஒன்று உள்ளது. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம் பெற்ற சம்பவம் இது.

 

திண்ணன் எனும் வேடர் குலத்தலைவன் மலையில் ஒரு சிவலிங்கத்தைப் பார்க்கிறான். பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. அங்கே வரும் அர்ச்சகர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து மலர்கள் சூட்டி நிவேத்யம் படைப்பதை பார்க்க, தானும் அது போல தன் மனம் கவர்ந்த லிங்கத்திற்கு வழிபாடு செய்ய விரும்புகிறான்.

 

அந்த காட்டில் கிடைக்கும் வில்வ இலைகளோடு தீயில் வாட்டிய பன்றிக் கறியோடு, பாத்திரம் ஏதுமில்லாததால் அருவி நீரை தன் வாய்க்குள் சேகரித்து சென்று அர்ச்சகர் போலவே அபிஷேகம்  செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து பன்றி இறைச்சியை படைக்கிறான்.

 

மறுநாள் அர்ச்சகருக்கோ அதிர்ச்சி

 

அனைத்தையும் சுத்தம் செய்து அவர் வழக்கம் போல வழிபடுகிறார். இரவு திண்ணன் தன் பாணியில் வழிபடுகிறான்.

 

பொறுமையிழந்த அர்ச்சகர் சிவனிடம் முறையிட அன்றைய இரவு நடப்பதை ஒளிந்திருந்து பார்க்கச் சொல்கிறார்.

 

திண்ணன் வர அவனுடைய பூஜைகள் முடிகிறது. அப்போது சிவ லிங்கத்தை பார்த்தால் லிங்கத்தின் கண்ணிலிருந்து ரத்தம் வடிகிறது. பச்சிலைகள் கொண்டு வந்து பிழிந்தாலும் நிற்கவில்லை.  அதனால் அம்பு கொண்டு தன் ஒரு கண்ணை பிடுங்கி ரத்தம் வந்த கண்ணில் வைக்க ரத்தம் நின்று போகிறது.

 

ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தன்னுடைய இரண்டாவது கண்ணை பிடுங்கவும் திண்ணன் தயார். தான் முழுமையாக பார்வையிழந்து விட்டால் ரத்தம் வடியும் கண் எங்கே உள்ளதென்று தெரியாது என்பதால், அந்த கண்ணிற்கு மேலே தன் காலை வைத்துக் கொண்டு தன் கண்ணை பிடுங்கப் போக, அப்போது சிவன் தோன்றி திண்ணனுக்கு அருள் பாலிக்கிறார்.

 

திண்ணனின் தீவிர பக்தி அர்ச்சகருக்கும் புரிகிறது. சிவனுக்காக தன் கண்களை இழந்த திண்ணன் கண்ணப்பன் என்று அழைக்கப்பட, நாயன்மார்களில் ஒருவராகவும் பெருமை பெருகிறார். இந்த சம்பவம் நடந்த நாள் எது தெரியுமா?

 

ஆம். அன்று சிவராத்திரி

 

பன்றி இறைச்சி படைத்த பக்தனுக்கு சிவராத்திரி நாளன்று சிவனே அருள் தந்தது பெரிய புராணத்தில் பதிவாகியுள்ளது.

 

சிவராத்திரி அன்று அசைவம் சாப்பிடக்கூடாது என்று பிதற்றும் காவிக்கயவர்கள் சிவபெருமானைத்தான் இழிவு படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment