Tuesday, March 4, 2025

சீமான் -உச்ச நீதிமன்றம்- பழைய தீர்ப்பு



 சீமான் மீதான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், சீமானுக்கு ஆதரவான நிலை எடுத்து கட்டப் பஞ்சாயத்து செய்யச் சொல்லியுள்ளது. மறைமுக சங்கியான சீமானுக்கு சாதகமான நிலை ஏற்பட்டதில் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ ஏதுமில்லை. இது போன்ற தீர்ப்பு புதிதுமல்ல.

2021 ம் ஆண்டு எழுதிய பதிவொன்றே அதற்கு சான்று

02, மார்ச், 2021 அன்று எழுதிய பதிவு கீழே

விவேக் தீர்ப்பே மேல் ஜட்ஜய்யா

 


 

மைனர் பெண்ணை பாலியல் கொடுமை செய்தவனுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை தருவதற்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொண்டால் உதவ தயாராக இருப்பதாக கீழ் மட்டத்தில் இருக்கிற மாஜிஸ்டிரேட் சொன்னாலே அது மிகப் பெரிய அராஜகம். ஆலமரத்தடி கட்ட பஞ்சாயத்தை விட மோசமான ஒன்று.

  ஆனால் அதையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொன்னால் கேட்பதற்கே அது எவ்வளவு நாராசமாக உள்ளது!

  ஒரு பாலியல் குற்றவாளிக்கு தலைமை நீதிபதி சட்டத்தை மீறி இரக்கம் காண்பிக்க வேண்டிய தேவை என்ன?

 


 மகாபாரதக் கதையே உங்களால் மாறி விடும் போல இருக்கே யுவர் ஆனர்!

  இப்படிப்பட்ட தீர்ப்பிற்கு விவேக் அளித்த தீர்ப்பே மேல் என்று சொல்ல வைத்து விட்டீர்களே யுவர் ஆனர்.

  ஒரு சின்ன டவுட் ஜட்ஜய்யா

  உங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயை பாலியல் புகாரில் விடுவித்ததால் மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் அதே சலுகையை காண்பிக்கிறீர்களோ?

 

1 comment:

  1. This may come under contempt comrade. This questions motive of the judge. Please be cautious while writing on public forum.

    ReplyDelete