நேற்று முகநூலில் பல நண்பர்களின் பக்கத்தில் பார்த்த பதிவு கீழே உள்ளது.
இந்த பதிவை படிக்கும் போது சிரிப்பாகவும் எரிச்சலாகவும் அதே நேரம் பரிதாபமாகவும் இருந்தது.
ஒரு வேளை நக்கல் பதிவோ என்ற சந்தேகத்தில் அவர் பக்கத்திற்கு சென்றால், இந்த குறிப்பிட்ட பதிவை காணவில்லை. ஆனால் அது பற்றி அவரின் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். அப்படியே அவரின் மற்ற பதிவுகளை பார்த்தால் தலை சுற்றியது. நவீன ஜோதிடரான அவரது விளக்கங்கள் எல்லாம் சராசரியான எனக்கு புரியவே இல்லை. அவர் மனநிலை குறித்து அறிய உதவிய பதிவு கீழே உள்ளது.
தன்னை முனைவர் முனிவர் என்றழைத்துக் கொள்ளும் இந்நபரை அவரது நண்பர்கள் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. மன நோய் முற்றுவதற்குள் சிகிச்சையை துவங்குங்கள்.இப்படித்தான் இந்த பதிவை முடிக்க நினைத்திருந்தேன். "முனைவர் முனிவரே, மருத்துவரிடம் செல்லுங்கள் " என்றுதான் தலைப்பும் வைத்திருந்தேன்.
பிறகுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
தான் இயற்கையாக ஒரு தாய் மூலமாக பிறக்காத தெய்வக்குழந்தை என்று மோடி தன்னை சொல்லிக் கொள்ளும் போது இந்த ஜோசியர் மட்டும் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளக்கூடாதா?
அடிச்சு விடுங்க முனைவர் முனிவரே! மோடியை விட அதிகமாக உங்களால் கதை விட முடியாது என்ற போதிலும் முயற்சியை கைவிடாதீர்கள். குறைந்த பட்சம் ஆட்டுக்காரனுக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவீர்கள். வாழ்த்துக்கள் . . .
No comments:
Post a Comment