நேற்று ஆங்கில இந்துவில் படித்த செய்தி கீழே . . .
"இந்திய குடிமக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். ஏராளமான வழ்க்குகள் காலம்காலமாக நிலுவையில் உள்ளது. அதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. நீதித்துறை இந்தியமயமாக்கப் பட வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மொழி அந்தந்த பகுதிகளின் மொழியாக இருக்க வேண்டும், வழக்காடிகளுக்கு தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. முக்கியமான பல வழக்குகள் எடுக்கப்படுவதே இல்லை."
இவற்றைச் சொன்னது 24,பிப்ரவரி 2021 முதல் 26 ஆகஸ்ட், 2022 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த திரு என்.வி.ரமணா. 17.02.2014 லில் இருந்தே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார். அதனால் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் "கோலோஜியம்" உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்திருப்பார்.
எனது கேள்வி எளிமையானது.
நீதித்துறையின் குறைகள் என்று பட்டியல் போடுகிற பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
வழக்கு மொழி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருந்தும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை?
சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க கொலோஜிய உறுப்பினராக என்ன செய்தீர்கள்?
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பட்டுவாடா செய்ய எந்த நடவடிக்கையும் உங்களால் எடுக்கப்படவில்லையே, ஏன்?
தேர்தல் பத்திரம், காஷ்மீர் சிறப்புப்பிரிவு 370, உள்ளிட்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டிய 53 முக்கிய வழக்குகளை தொடாமல் அப்படியே ஓய்வில் சென்று விட்டீர்களமே, ஏன்?
பதில் சொல்வீங்களா யுவர் ஆனர்?
இன்று விழித்துக் கொண்டுள்ள உங்கள் மனசாட்சி, பதவியில் இருக்கும் போது ஏன் உறங்கியது?
No comments:
Post a Comment