சாம்சங்கிற்கு சுங்க வரி மோசடிக்காக 5000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக நேற்று எழுதினேன். அது அமலாகுமா என்ற ஐயத்தையும் தெரிவித்திருந்தேன்.
ஏன்?
அபராத செய்தி வந்த அதே நாள் நிர்மலா அம்மையார் தயாள குணத்தோடு அறிவித்த சலுகைகள் பற்றிய அறிவிப்பும் வந்திருந்தது.
மோடி அமெரிக்கா செல்லும் முன்பு ட்ரம்பிற்கான பரிசாக "ஹார்லி டேவிட்சன்" பைக்கிற்கும் போர்பன் விஸ்கிக்கும் (இந்த போர்பன் விஸ்கி குறித்து சமீபத்தில் கேட்ட ஒரு தகவலை தனி பதிவாக எழுதுகிறேன்) இறக்குமதி வரியை குறைத்தார்.
ட்ரம்பிற்கு இதெல்லாம் திருப்தியளிக்கவில்லை.
அதனால் எலக்ட்ரிக் வாகனத்திற்கான பேட்டரி, மொபைல் பேட்டரி ஆகையவை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் உட்பட 35 பொருட்களின் சுங்க வரியை குறைத்துள்ளார் நிர்மலா அம்மையார். அவர் நேற்று முன் தினம் அறிவித்தார். நாளை அமெரிக்காவிலிருந்து ஒரு குழு சுங்கவரி குறித்து விவாதிக்க வருகிறது. அம்மையார் அறிவிப்பிற்கும் அமெரிக்க குழு வருவதற்கும் சம்பந்தமில்லையாம்.
35 பொருட்களின் சுங்க வரியை குறைத்த நிர்மலா அம்மையார், சாம்சங்கும் அம்பானியும் அபராதம் கட்ட விடுவாரா? எந்த பொருட்களை இறக்குமதி செய்ததில் பிரச்சினையோ அவற்றுக்கான சுங்கவரியை முன் தேதியிட்டு அகற்றி விட மாட்டாரா!
அப்படி செய்தால் என்ன செய்யும் சுங்கத் துறை?
அப்படி நடக்காது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?
No comments:
Post a Comment