Thursday, March 6, 2025

பன்றி இறைச்சியும் சிவராத்திரியும்

 


சிவராத்திரி அன்று அசைவ உணவு சாப்பிட்டவர்களை ஏ.பி.வி.பி குண்டர்கள் தாக்கிய நிகழ்ச்சி தொடர்பாக காலையில் எழுதியிருந்தேன்.

சிவராத்திரி அன்று அசைவம் சாப்பிடக்கூடாது என்று புதிய சட்டம் போடும் காவிக்கயவர்கள் மகாபாரதம் படித்திருப்பார்களா?

சிவனை நோக்கி தவம் இருந்த அர்ஜூனனின் தவத்தை ஒரு காட்டுப்பன்றி கெடுக்க அதை வேட்டையாடச் செல்கிறான். அப்போது ஒரு வேடனும் அந்த பன்றியை நோக்கி வருகிறான். இருவரும் அம்பு எய்கிறார்கள். பன்றி இறந்து போகிறது. அந்த பன்றியின் இறைச்சி யாருக்கு சொந்தம் என்று தகராறு வருகிறது. கட்டிப் பிரண்டு சண்டை போடுகிறார்கள். அர்ஜூனன் தோற்றுப் போக தன் வில்லால் அந்த வேடனை அடிக்க, அந்த அடி அவன் மேலும் படுகிறது. பிறகுதான் தெரிகிறது  அந்த வேடன் சிவபெருமான் என்று.

அர்ஜூனன் தவத்தை மெச்சி சிவபெருமான் கொடுத்த வரம்தான் “பாசுபதாஸ்திரம்” (ஆனால் அதை பயன்படுத்தியதாக தெரியவில்லை)

அப்படி அர்ஜூனன் வரம் வாங்கிய நாள் சிவராத்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானே சிவராத்திரியன்று பன்றி இறைச்சிக்காக சண்டையிட்ட போது இந்த ஏ.பி,வி.பி குண்டர்கள் யார் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று சொல்ல?

பிகு: மேலே உள்ள கதையை  நான் படித்தது ராஜாஜி எழுதிய மகாபாரதம் நூலில்தான்.

புராணம் இதோடு முடியவில்லை. இன்னும் இருக்கிறது. அது பெரிய புராணம். 

 

No comments:

Post a Comment