யோவ் யாருய்யா நீ?
நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?
போனா போகுதுன்னு முதல் வரிசையில உட்கார இடம் கொடுத்தா போட்டோவுக்கு போஸ் கொடுப்பியா?
போட்டோவுக்கு போஸ் கொடுக்கறதுக்குன்னே பொறந்த எங்க பிரதான் மந்திரி மோடியே காமெராவை பாக்காத மாதிரி நடிச்சா, நீ என்னமோ காமெராவை பாத்து போஸ் கொடுக்கற!
நீ என்ன இந்தோனேஷியாவோட ஜனாதிபதியா? பிரதம மந்திரியா? அவங்களே காமெராவை பாக்கலை, நீ பாத்துக்கிட்டு இருக்க! இந்த மாதிரி எல்லாம் வெட்டியா போஸ் கொடுத்தா மோடி உன்னை சும்மா வுட மாட்டாரு தெரியுமில்ல?
அதனால போட்டோவுக்கு போஸ் கொடுக்காம உருப்படியா எதையாவது கிழிக்கப்பாரு . . .
No comments:
Post a Comment