நேற்றைய
பதிவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்க்சாலக் சத்ரபதி சிவாஜியின் மகன் “சாம்பாஜியை
குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய
பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்யச் சொல்லி மானத்தை காப்பாற்றிக்
கொள்ளச் செய்தான்” என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன்.
கோல்வாக்கரின்
“சிந்தனைக் கொத்துக்கள்” நூலில் அந்த குறிப்பிட்ட பகுதி கீழே உள்ளது. காண்டோ பல்லாலை
கோல்வால்க்கர் புகழோ புகழ் என்று புகழ்கிறார் என்பது அதை படித்தால் உங்களுக்கு புரியும்.
யார்
இந்த காண்டோ பல்லால்?
“சாம்பாஜியின்
தீவிர விசுவாசி இந்த காண்டோ பல்லால். இவனின் தந்தை சத்ரபதி சிவாஜியின் எட்டு அமைச்சர்களில்
ஒருவர். சிவாஜி இறந்து சாம்பாஜி அரியணைக்கு வந்த பிறகு முந்தைய ஏதோ கசப்பின் காரணமாக அவருக்கு மரண தண்டனை
அளித்து கொன்று விட்டான். தன்னுடைய வலியையும்
தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மௌனமாக விழுங்கிக் கொண்டு சாம்பாஜிக்கு சேவை புரிந்தான்.
மதுவுக்கு
அடிமையாகி பெண்களை வேட்டையாடுவதை வழக்கமாக்கிக் கொண்ட சாம்பாஜியின் தீய பார்வை தன்
சகோதரி மீது படிவதை அறிந்ததும், கற்பை பாதுகாத்துக் கொள்ள அவளை தற்கொலை செய்து கொள்ள
வைத்தான்.
சாம்பாஜியின்
மோசமான குணங்கள் பற்றி தெரிந்திருந்தாலும் இந்துக்களை ஒன்றினைக்கும் அடையாளமாக சாம்பாஜி
இருந்ததால் இந்து தர்மத்திற்காக காண்டோ பல்லால் சாம்பாஜிக்கு துணையாக இருந்தான். ஔரங்கசீப்பால்
சாம்பாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது தன் உயிரை பணயம் வைத்து மீட்டு
வந்தான்.
சாம்பாஜியின்
மரணத்திற்கு பின்பு அரியணைக்கு வந்த சாம்பாஜியின் சகோதரன் ராஜாராமிற்கும் விசுவாசமாக
இருந்தான் காண்டோ பல்லால். செஞ்சிக் கோட்டையில் சிக்கிக் கொண்ட ராஜாராமை காப்பாற்றும்
பணியில் இறந்து போகிறான்.
எப்பேற்பட்ட
தியாக வாழ்வு காண்டோ பல்லால் உடையது!”
இதுதான்
கோல்வால்கர் காண்டோ பல்லால் பற்றி எழுதியது.
தந்தையை
கொன்று, சகோதரியை பாலியல் வன்புணர்ச்சி செய்ய திட்டமிட்டு தற்கொலை செய்ய வைத்த சாம்பாஜியின்மீது
கொஞ்சமும் கோபப்படாமல் விசுவாகமாக இருப்பதற்கு என்ன் பெயர்?
கையாலாகாதவன்
…
கோழை,
சுயநலவாதி
மத
வெறி கண்ணை மூடியதால் தன் வாழ்வை அழித்த சாம்பாஜிக்கு
எதிராக திரும்பாமல் ஆதரவாக செயல்பட்ட காண்டோ
பல்லாலை மூடன் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது!
அவன் காட்டிய பாதையில் இன்றும் ஆயிரக்கணக்கான சங்கிகள் பாஜக அரசால் தங்கள் வாழ்வாதாரம் அழிந்து போவதைக் கூடப் பற்றி கவலைப்படாமல் உசுப்பேற்ற்றப்பட்ட மதவெறி காரணமாக மூடர்களாக தங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காண்டோ பல்லால் ஒன்றும் முட்டாள் இல்லை பிராமணர்கள் சிவாஜியின் தயவால் ஒரு நூற்றாண்டு அரசாள முடிந்தது . முட்டாள் சிவாஜியை பிஜேபி புகழ்வதின் காரணமே பிராமணர்களுக்கு அடிமையாக சிவாஜி இருந்ததுதான் . சிவாஜி ராஜவம்சத்தில் பிறக்காததால் ராஜாவாக முடிசூட்ட பிராஹ்மணர்களுக்குகாக பணத்தை வாரி இறைத்தார். நிர்வாகம் பிராமணர்கள் கையில் இருந்தது . சம்பாஜிக்கு பின் முழு அதிகாரமும் பிராமணர்கள் கைக்கு போய் விட்டது . அதற்கு பின் பிராமண மந்திரிகள் தானே ராஜாவாகி விட்டனர் பேஷ்வாக்கள் என்ற பெயரில் . ஜாதி துவேஷமும் மத கொடுமைகளும் அதிகமாகி விட்டன . பிராமண பேஷ்வாக்கள் சொந்த மக்களையே அடிமைப்படுத்தி வெறியாட்டம் ஆடினர். அப்புறம் அப்தலியும் ஆங்கிலேயனும் பிராமண ஆட்சிக்கு ஆப்பு வைத்தனர் . அவர்கள் செய்த எந்த யாகமும் அவர்களை காப்பாற்ற வில்லை
ReplyDeleteகோல்வால்கரும் சாவற்கரும் வரலாற்று ஆசிரியர்கள் அல்ல
ReplyDeleteஇந்தியாவை உண்மையில் ஆள்வது பிராமணர்களே
தமிழ் நாட்டிலும் அரசாங்கத்தை நடத்துவது பிராமணர்களே
பெரும்பான்மையான நீதிபதிகள் பிராமணர்கள்
எல்லா செகிரேட்டரியாட்டிலும் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பிராமணர்களே
பெரும்பாலான நியூஸ் சேனல் நடத்துபவர்கள் பிராமணர்களே
பிரம்மணர்களுக்கு எதிராக எந்த நியூஸும் வெளியே வராது