லெக்ஸ் ஃப்ரீட்மென் என்ற ஊடகவியலாளரிடம் மோடி நடத்திய பேட்டி நாடகத்தில் தன் கால் வெள்ளை ஷூவுக்கு பாலிஷ் போட காசில்லை என்று மோடி உருட்டிய உருட்டு மட்டுமே மக்களால் கலாய்க்கப்பட்டது. அதை தாண்டியும் பல முக்கிய விஷயங்கள் அந்த பேட்டியில் உள்ளது. (இரண்டு பதிவுகளுக்கான content)
அந்த பேட்டியில் ட்ரம்பை புகழோ புகழு என்று புகழ்கிறார். அமெரிக்காதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பது என்னை பார்ப்பது போலவே இருக்கிறது என்று செல்பி பீற்றல் வேறு. ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு உருவாக்கும் பாதிப்புக்கள் பற்றி வாய் திறக்கவே இல்லை.
அதே போல சீனா பற்றியும் பம்முகிறார். அண்டை நாடுன்னா எல்லைப் பிரச்சினை இருக்கத்தான்யா இருக்கும், அதையெல்லாம் பேசித்தான் தீர்க்கனும், சீனா ஜனாதிபதி கூட நான் பேசியிருக்கேன். என்று பதுங்குகிறார்.
ஆனால் அதே சமயம்
பாகிஸ்தான் மீது சீறுகிறார், அதானிக்கு வணிக ஒப்பந்தம் பெறுவதற்காக நானே பாகிஸ்தான் போனாலும் கதைக்காகவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது நமக்கு தெரியுமல்லவா!
பேட்டியில் இல்லாவிட்டாலும் இன்னொரு செய்தியை காலையில் படித்தேன். சீனாவுடன் எல்லை பிரச்சினை தீவிரமானது. ஆனால் அது பற்றி பம்மும் மோடி மியன்மர் எல்லையில் 1500 கிலோ மீட்டர் தூரத்திற்கு முள் வேலி போடுகிறார்.
ஆக இவர் வீரமெல்லாம் எளியோருடன் மட்டுமே . . .
No comments:
Post a Comment