வட
இந்தியாவில் நடந்த கூத்து இது. மகா சிவராத்திரியன்று அங்கே விலங்குகள் காட்சியகத்தில்
இருந்த புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்தமைக்காக பாஜகவின் மாணவர் படை ரௌடிகள் தாக்குதல்
நடத்தியுள்ளார்கள். இந்தியர்கள் என்ன உணவு
சாப்பிட வேண்டும் என்று இது நாள் வரை கட்டுப்பாடுகள் விதித்த சங்கிகள் இப்போது மிருகங்களுக்கும்
தங்கள் அராஜகத்தை விரிவு படுத்தியுள்ளனர்.
“புலி
பசித்தாலும் புல்லை தின்னாது” என்ற பழமொழியெல்லாம் அவர்களுக்கு தெரியாது போல!
புலிகளுக்கு
இனிமேல் மாட்டுக்கறி மறுக்கப்பட்டால் அவை மனுசக் கறியை நோக்கி போய் விடப் போகிறது.
மேலே
உள்ள செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்ட பதிவுதான் மேலே உள்ளது.
பொறுப்பில்லாதவனாக
இருந்திருந்தால் பதிவு மேலே உள்ள பத்தியோடு முடிந்திருக்கும். ஆனால் நான் அப்படி இல்லையே!
மேலே
உள்ள செய்தி சரியா என்று இணையத்தில் தீவிரமாக தேடினேன். அது ஏ.பி.வி.பி யை நக்கலடிக்க
வெளியிடப்பட்ட செய்தி என்று தெரிந்து கொண்டேன்.
ஏன்
ஏ.பி.வி.பி யை நக்கலடிக்க வேண்டும்?
புது
டெல்லியில் உள்ள தென் ஆசிய பல்கலைக்கழக விடுதியில் உள்ள அசைவ உணவகத்தில் சிவராத்திரி
அன்று அசைவ உணவு பறிமாறப்பட்டதற்காக ஏ.பி.வி.பி ரௌடிகள் உணவகத்தில் இருந்த மாணவ, மாணவியர்,
ஊழியர்களை தாக்கியுள்ளனர். அவர்கள் அசைவம் சாப்பிடுவதால் விரதம் இருப்பவர்கள் மனம்
புண்படுகிறதாம்.
அசைவ
உணவகத்தில் அசைவ உணவு சாப்பிடுவதைக் கூட அனுமதிக்காமல் பொறுக்கித்தனம் செய்கிற ஏ.பி.வி.பி
ரௌடிகள் நாளை புலிகளுக்குக் கூட புல்லை போடச்சொல்வார்கள் என்று நக்கலடிப்பதுதான் அந்த
செய்தியின் அர்த்தம். . .
இந்த
உணவுக்கலாச்சாரக் கழிசடைகளுக்கு இரண்டு செய்திகளை சொல்ல வேண்டும். ஒன்று புராணம். இன்னொன்று
காவிப் பொருளாதாரம்.
அவை
தொடரும்.
No comments:
Post a Comment