Friday, October 20, 2017

மீண்டும் மீண்டும் எல்.ஐ.சி தான்




ஒரே நிகழ்வு - அலட்சியத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் உதாரணமாய்.




பொறையாரில் பாழடைந்த பணிமனைக் கட்டிடம் இடிந்து விழுந்து எட்டு போக்குவரத்து ஊழியர்களின் உயிரைக் குடித்த கொடூர சம்பவம் தமிழக ஆட்சியாளர்களின், அரசு நிர்வாகத்தின் அலட்சியத்திற்கு உதாரணம்.

மரணமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள் காப்பீடு செய்திருந்த பாலிசிகளின் கேட்புரிமத் தொகையான ரூபாய் பதினைந்து லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை இறப்புச்சான்றிதழுக்காகக் கூட காத்திருக்காமல் விதிகளைத் தளர்த்தி இன்றே பணத்தை அளித்தது எல்.ஐ.சி. இது அர்ப்பணிப்பிற்கான உதாரணம்.





































"வாழும் போதும், வாழ்க்கைக்குப் பிறகும்"  என்ற தனது முழக்கத்திற்கு தொடர்ந்து அர்த்தம் கொடுத்து  வருகிறது.

இந்த மகத்தான நிறுவனத்தைத்தான் அம்பானி, அதானி உள்ளிட்ட உள்நாட்டு, பன்னாட்டு முதலைகளிடம் தாரை வார்க்க மோடி அரசு துடிக்கிறது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

நாளை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும். 

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இறந்த தொழிலாளிகளுக்கு நியாயம் கிடைக்கட்டும். 

2 comments:

  1. WELL DONE LIC. ONLY LIC CAN DO THIS. .PRIVATE INSURANCE COMPANIES WILL CHEAT COMMON PEOPLE
    SO NATIONALISATION OF INSURANCE, BANKING, RAILWAYS, SHOULD CONTINUE . DONT HANDOVER THESE
    VITAL SECTORS TO PRIVATE PEOPLE WHO WILL NOT HELP COMMON PEOPLE.

    ReplyDelete
  2. Thanks for your acknowledgement sir...I'm really proud of my father..

    ReplyDelete