Thursday, October 26, 2017

அவர் புகைப்படம் இங்கே . . .



ஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட      (இணைப்பின் மூலம் செல்லவும்)


என்ற நேற்றைய பதிவில் வேலூரில் குழந்தைகள் நல நிபுணராக திகழ்ந்த  டாக்டர் பிரகாசம் அவர்கள் பற்றிய என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அவரது புகைப்படம் இணையத்தில் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தேன். 

முத்து என்ற ஒரு நண்பர் அவரது புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். 

அந்த மின்னஞ்சலில் அவர் எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  

Read your message on Dr. Praskam...Thanks for sharing your experiences of the great man.

your search for Dr.'s picture if it has not yielded any lookout for his son normally puts up obituaries in tamizh newspapers in the month of August for his parents together.


Best Regards
Muthu

அது  மட்டுமல்லாது மருத்துவர் பிரகாசம் அவர்களின் மகனும் பின்னூட்டம் இட்டிருந்தார். 

Thanks for your acknowledgement sir...I'm really proud of my father..

உண்மையிலேயே மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது. 

முந்தைய பதிவிலேயே அவர் புகைப்படத்தை இணைத்திருந்தாலும் கூட தனியாக இன்னொரு முறையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்வை ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி தோழர் மரியா சிவானந்தம் அவர்கள் முகநூலில் இட்டிருந்த பின்னூட்டம் உருவாக்கியது.

 Yes . He has been an epitome of sincere medical service to the people of Vellore. Recalling with gratitude .


ஆம். உண்மையாக சேவை செய்தவர்களை மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். 

1 comment:

  1. உங்களுடைய முந்தைய பதிவில் இருந்த குறை தற்போது நிறையானதை எண்ணி மகிழ்கிறேன். இவரைப் போன்ற மாமனிதர்களைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் சமூகத்திற்கு நலம் பயக்கும். நன்றி.

    ReplyDelete