கீழே உள்ள கவிதையை எங்கள் கோட்டச் சங்க மாநாட்டு அறிக்கையின் பின்பக்கத்தில் வெளியிடுவதற்காக எழுதியிருந்தேன். முதலில் கவிதையை படியுங்கள்.
எரிமலை
வெடிக்கும்
அன்று
அண்ணலை துளைத்து
மண்ணில் வீழ்த்திய
அதே தோட்டாக்கள்
இன்று
பாய்ந்தது கௌரி மீது.
அன்று
ரோஹித் வெமுலா கழுத்தில்
தூக்குக் கயிற்றை மாட்டிய
அதே கரங்கள்
இன்று
அதே கயிற்றை
அனிதாவுக்கும் அளித்தது.
அன்று
குஜராத்தில் ரத்தத்தை
ருசி பார்த்த
வெறி கொண்ட மிருகம்
இன்று
தேசமெங்கும் அலைகிறது
குருதி குடிக்க.
உயிரைத்தான் பறிக்க
உங்களால் முடியும்.
விதையாய் புதையுண்ட
அந்த உணர்வுகள் உருவாக்கும்
ஆயிரமாயிரம் விருட்சங்கள்,
கோபக்கனலை நெஞ்சில் தேக்கி
எரிமலையாய் வெடிக்கும்
உங்களுக்கு முடிவுரை எழுத.
மாநாடு முடிந்து வந்த பின்பு ஒரு நான்கு நாட்கள் செய்திகளைப் பார்க்கையில்தான் "காந்தியைக் கொன்றவர்கள்தான் கௌரியைக் கொன்றார்கள்" என்று முழக்கமிட்டதற்காக பல படைப்பாளிகளை காந்தி சிலை அருகே எடுபிடி பழனிச்சாமி அரசு கைது செய்தது என்பது தெரிய வந்தது.
உண்மையைச் சொல்வதற்காக கைது செய்ய வேண்டுமென்றால் தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே சிறைகள் போதாது என்பதை எடுபிடியும் மோடியும் புரிந்து கொள்ளட்டும்.
காலம் இதெற்கெல்லாம் நல்ல பதில் கொடுக்கும்.
ReplyDeleteகாலம் இதெற்கெல்லாம் நல்ல பதில் கொடுக்கும்.
S.kumar, Manasu
ReplyDeleteகாலம் இதெற்கெல்லாம் நல்ல பதில் கொடுக்கும்.
கவிதை அருமை, உண்மை
ReplyDelete