Wednesday, October 11, 2017

முன்பே இறந்தது அவர்கள் குற்றம் . . .





அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன விமானப்படை வீரர்களின் சடலங்களை அட்டைப் பெட்டியில் அடைத்து அவமானப்படுத்தியது  குறித்து பலரும் தங்களின் கோபத்தை வெளிப் படுத்தியுள்ளனர்.

செல்லா நோட்டு விவகாரத்தின் போது “எல்லையிலே ராணுவ வீரர்கள்” என்று ஆரம்பித்து உபதேசம் செய்த  ஆட்சி  ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என்று நியாயமாகவே கேட்டுள்ளனர்.

“நீட்” நிர்மலா ராஜினாமா செய்ய  வேண்டும் என்ற கோரிக்கையும் அழுத்தமாகவே எழுந்துள்ளது.

எல்லாம் சரிதான்.

பாஜகவிற்கென்று சில விளக்கங்கள் இருக்குமல்லவா?

அவர்கள் யாரும் மனம் திறந்து பேசாததால் அவர்களின் மைன்ட் வாய்ஸை நானே சொல்கிறேன்.

“பிரச்சினையை திசை திருப்ப நாங்கள் பேசிய வசனம் “எல்லையில் ராணுவ வீரர்கள்” அதை சீரியஸா எடுத்துக்கலமா?  சிப்பாய்களுக்கு சாப்பாடு சரியில்லை என்ற தேஜ்பகதூர் யாதவிற்கு பைத்தியக்காரன் பட்டம் கட்டி வேலையிலிருந்து தூக்கியதைப் பார்த்தும் எங்க காரெக்டர்  புரியவில்லை  என்றால் அது யார் குற்றம்?”

எங்கள் ஆட்சியில் சவப்பெட்டி என்றாலே அதன் பொருள் டீலிங் என்பதுதான். இத்தனை நாள் பாதுகாப்பு அமைச்சர் இல்லாததால் டீலிங் செய்ய வாய்ப்பில்லாமல் இருந்தது. இப்போதான் மந்திரி வந்திருக்காங்க. பீரங்கி முதல் சவப்பெட்டி வரை ஒன்றொன்றாக பேரம் பேசித்தான் வாங்கனும் (பேரம் என்பதற்கு கமிஷன் என்று பொருள் கொள்க). டீலிங் முடிந்து நாங்கள் சவப்பெட்டி வாங்கும் முன்பாக இறந்து போனது யார் குற்றம்?

1 comment:

  1. உண்மைதான்! இறந்தவருக்கு யாரும் விவவரம் சொல்லவில்லை போலும்!

    ReplyDelete