Saturday, October 14, 2017

இனி அமித் ஷா . . . . . . . . .என்றே . . . .



யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே

என்பது பழமொழி.

அமித் செல்வார் முன்னே, கலவரம் வரும் பின்னே

என்பது புது மொழி.

அகில இந்திய தலைவராக்கி உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பினார்கள். முசாபர் நகர் கலவரம் நடந்தது.

திரிபுராவுக்கு போனார். திரிணாமுல் கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கினார். அவர்கள் கூச்சலும் குழப்பமுமாய் கலவரத்திற்கு வித்திட்டார்கள். ஆனால் இடது முன்னணி ஆட்சியின் துரித நடவடிக்கை காரணமாக அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு விட்டது.


ஜன ரட்சக யாத்திரை என்று கேரளா போனார். வன்முறையைத் தூண்டி விட்டார். பாஜக அலுவலகத்திலிருந்து வெடிகுண்டுகளை கைப்பற்றி உள்ளனர்.

உத்தர்கண்ட் போனார். அங்கே பாஜகவின் காலிகள் காக்கிகள் துணை கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினார்கள்.

உ.பி யில் கையாலாகாத அகிலேஷ் யாதவ் ஆட்சி என்பதால் அமித் ஷாவின் சதிச்செயலுக்கு வெற்றி கிடைத்தது.

ஆனால்

திரிபுராவிலும்  கேரளாவிலும் இந்த வேலை எடுபடாது என்பதை இத்தனை நேரம் புரிந்து கொண்டிருப்பார்.

எங்கு சென்றாலும் அங்கே கலவரங்களை தூண்டுவதையே பிழைப்பாகாகக் கொண்டுள்ள அமித் ஷா விற்கு “கலவரக் காவி” என்று  அடைமொழி கொடுத்தால் என்ன?


No comments:

Post a Comment