Saturday, October 7, 2017

சிவனும் நக்கீரனுமாய் சிவாஜியே



கீழே உள்ள காணொளி நேற்று வாட்ஸப்பில் வந்தது.  திருவிளையாடல் திரைப்படத்தின் தருமி காட்சியில் நக்கீரன், சிவன் ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் நடிகர் திலகமே நடித்துள்ள காட்சி அது.

ஆஹா, இது என்ன அற்புதம் என்று காணொளியை பார்க்கையில் தோன்றியது. இத்தனை நாட்கள் வரை இப்படி ஒரு காட்சி இருக்கிறது என்பதை அறிந்தது கிடையாது. எனக்கு வந்த காணொளியில் வேறு விபரங்கள் எதுவும் இல்லை. இதை அப்படியே திருவிளையாடலில் சுட்டு விட்டார்களோ என்று கூட தோன்றியது.

பிறகு இணையத்தில் தேடிய போது இக்காட்சி "நான் பெற்ற செல்வம்" திரைப்படத்தில் வந்த காட்சி என்பதும் அதன் கதை வசனமும் திருவிளையாடல்  இயக்குனர் ஏ.பி.நாகராஜன் என்றும் தெரிந்தது.

சிவாஜி கணேசன் அவர்களை மிகை நடிப்பு என்று சிலர் விமர்சனம் செய்வார்கள். நடிப்பென்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களின் ரசிகர்கள் அவர்கள் என்பது வேறு விஷயம்.

இத்திரைப்படக் காட்சியைப் பார்ப்பவர்களால் அந்த விமர்சனம் கூட சொல்ல முடியாது. 

காலத்தால் அழிக்க முடியாத கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பதை இந்த காட்சியும் நிரூபிக்கிறது.

தருமி பாத்திரத்தை நாகேஷுக்கு அளித்து திருவிளையாடல் படத்திற்கு ஏ.பி.என் கூடுதல் சுவாரஸ்யத்தை  கொடுத்துள்ளார் என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.


 




3 comments:

  1. அருமையான
    காணக் கிடைக்காத காணொலி நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. thanks for sharing such a wonderful piece featuring my favourite Thespian Sivaji. A rare good thing from a commie.

    ReplyDelete
    Replies
    1. கலை மக்களுக்கே என்று உரக்க முழங்குபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பது காவிக்கண்ணாடி அணிந்த முதியவரே, உங்களுக்கெல்லாம் புரியாது.

      Delete