தண்ணீர்
இல்லாத ஆறு
என்பது ஒரு காலத்தில்
வேலூரைக் குறிக்க பயன்படுத்திய சொற்களில் ஒன்று. அது உண்மையும் கூட.
நான் வேலூருக்கு வந்து இருபத்தி ஐந்து ஆண்டுகளாகிறது. இதற்கு முன்பாக இரண்டு முறையே பாலாற்றில் தண்ணீர் ஓடியுள்ளது. அது கூட ஒரிரு நாட்கள்தான்.
இரண்டாண்டுகளுக்கு முன்பாக மிகக் கடுமையான மழை தமிழகத்தில் பெய்த போது கூட பாலாற்றில் தண்ணீர் இல்லை.
இந்த வருடம்தான் பத்து நாட்களாக பாலாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.
எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் சென்று போய் பார்த்தால் பாலாற்றுக்குப் போகும் பாதையில் தண்ணீர் இருந்ததால் அருகில் சென்று பார்க்க முடியவில்லை.
வேலூர் காட்பாடி பாலத்தில் போய்ப் பார்த்தால் நன்றாக இருக்கும் என்றார்கள்.
அங்கே போய் பார்க்க இன்று காலைதான் வாய்ப்பு கிடைத்தது. பாலாற்றில் தண்ணீர் ஓடும் அந்த அரிய காட்சி இங்கே.
ஒரு நதியில் தண்ணீர் ஓடுவதே அரிய விஷயமாகி விட்டது என்பது எவ்வளவு பெரிய கொடுமை!
இன்னும் எத்தனை நாள் ஓடுமோ என்ற பெருமூச்சு வராமல் இல்லை. தண்ணீர் ஓடும் வரை மணல் கொள்ளைக்கு வாய்ப்பில்லை என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.
TWO GOOD THINGS HAPPENED TODAY.ONE IS WATER FLOWS HEAVILY IN PALAR. TWO BJP LOST HEAVILY IN
ReplyDeleteGURDASPUR PUNJAB. SO GOOD THINGS ARE HAPPENING.
தண்ணீர் ஓடிய பின் மணல் இன்னும் அதிகம் கிடைக்கும்............
ReplyDeleteWhat....Water in Palaru.....what is going on for TN....
ReplyDelete