ஒரு துயர நிகழ்வின் காரணமாக இரண்டு நாட்கள் வலைப்பக்கத்திற்கு வரவில்லை.
இந்த இரண்டு நாட்களில்தான் நல்லதும் கெட்டதுமாய் எத்தனை எத்தனை நிகழ்வுகள்! விரிவாக எழுத வேண்டிய அவசியம் உள்ளதாய் அவை அமைந்துள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொன்று பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.
அனைவரும் அர்ச்சகராகலாம் என்பதை நடைமுறைப்படுத்தி இந்தியாவிற்கு முன்னுதாரணம் படைத்தார் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன். கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டவர்களை கர்ப்பக்கிரகத்திற்குள் கைபிடித்து கூட்டி வந்தது முக்கியமான சாதனை. கேரள மார்க்சிஸ்ட் கட்சி அரசின் மகுடத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக்கல் இந்த முடிவு.
ஏற்கனவே பினராயி விஜயன் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்குகிற காவிகளால் இதை ஜீரணிக்க முடியவில்லை என்பது இயல்பானது, ஆனால் பெரியாரின் வாரிசு என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தமிழக கம்யூனிஸ்டுகள் மீதுள்ள வன்மத்தை வெளிப்படுத்த இச்சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டது ஒரு மிகப் பெரிய முரண். இத்தனைக்கும் இந்த நபரை தொலைக்காட்சிப் பேட்டியில் பாஜக நாராயணன் இழிவுபடுத்திய போதும் அவரை எந்த விவாதத்திற்கும் அழைக்கக் கூடாது என்று சிப்பு சேகர் அழுத்தம் கொடுத்த போதும் அவருக்காக துணை நின்றது தமிழகக் கம்யூனிஸ்டுகள்தான்.
சிலரின் முகமுடி கழன்று விழுவது கூட நல்லதுதான்.
பெயரில் மட்டுமே மதி இருந்து என்ன பயன்?
அபாண்டங்களை ஒதுக்கித்தள்ளி கொண்டாட வேண்டிய நேரம் இது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் பதிவுதான் மேலே உள்ள படம்.
No comments:
Post a Comment