Thursday, October 27, 2016

அழித்தால் மட்டும் விட்டுவிட முடியாது ஜெமோ






நேற்று போட்ட அவதூறு பதிவை ஆசான் கமுக்கமாக அழித்து விட்டார். அப்படி ஒன்று அவர் எழுதவேயில்லை என்று அவரது அடிப்பொடிகள் சாதித்தாலும் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அந்த பெண் ஊழியர் பற்றிய விபரங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் அது இந்தியன் வங்கி அல்ல. பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பூனா கிளை.

அந்த ஊழியர் அடுத்த வருடம் பிப்ரவரியில் ஓய்வு பெறப் போகிறார். ஐம்பத்தி ஒன்பது வயதான அவர் இரண்டு முறை மாரடைப்பு வந்தவர். பக்கவாதம் வந்து அதிலிருந்து குணமானவர். ஓய்வுக்காலம் வரை வீட்டிலேயே இருக்கும் அளவிற்கு விடுப்பு இருந்த போதிலும் அதை தவிர்த்து விட்டு ஓய்வு பெறும் நாள் வரை பணி செய்ய வேண்டும் என்று அலுவலகம் வருகிறவர்.

அவருடைய உடல் நலன் கருதி அவரை ஒரு கூடுதல் கவுண்டரில் அமர்த்தி உள்ளார்கள். இது தெரியாத ஒரு விவரம் கெட்டவன் வீடியோ எடுத்து பதிவு செய்ய, இதுதான் சாக்கு என்று இந்த மனிதனும் பெண் ஊழியர்களை இழிவு படுத்த பயன்படுத்திக் கொண்டு விட்டார். செந்தில் ராஜா என்று ஒரு ஆள் இருப்பானா என்பது கூட சந்தேகமாக இருக்கிறது.

அத்தனை பேரும் காரி உமிழ்ந்த பின்பு அந்த பதிவை நீக்கி நல்ல பிள்ளையாக ஒளிந்து கொண்டு விட்டார். தான் இழைத்த தவறுக்காக கொஞ்சமும் வருத்தமும் இல்லாமல் அவர் புகழ் பாடும் அடிப்பொடிகளின் கடிதங்களையும் புகைப்படங்களையும் போட்டுக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்.

பதிவை அகற்றினாலும் அதன் ஸ்க்ரீன் ஷாட் நிறைய பேரிடம் உண்டு. என்னிடமும் கூட.

பெண் ஊழியர்களை இழிவு படுத்திய இந்த பதிவிற்காக அவரை மன்னிக்கப் போவதில்லை.

வார்டன்னா மட்டுமில்லை, ஜெமோன்னாலும் அடிதான்.

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இதை உங்கள் ஆசான் செய்தால் பிரச்சினையே கிடையாதே அனானி. ஜெயமோகன் போலவே அவர் எடுபிடிகளும் ஆபாசமானவர்களாக இருப்பது இயல்பானதே

      Delete
    2. நான் இதை முகநூலுக்கு பகிர்ந்துள்ளேன்

      Delete
  2. you are remembering me a person i met during school days. Would be shouting in muttu sandhu demanding arrest of American president. :)

    ReplyDelete
  3. DEAR COMRATE.....THAT BANK LADY DOES NOT FIT FOR CASHIER OPERATION (MEDICAL REASON).
    BANK MANAGEMENT SHOULD HAVE TAKEN THE REMEDY TO AVOID CUSTOMER DIRECT INTERACTION. THEY CAN ASSIGN STAMPING /DISPATCH WORK LIKE THAT.

    CUSTOMERS TIME ALSO IMPORTANT. JUST THINK PER DAY THIS SO CALLED WORKING DAY WASTING THE 20 MTS EXTRA OF EACH PERSON , THE TOTAL MAN HOUR GETTING WASTED. WHO WILL COMPENSATE.

    DUE TO UNION / OR SOME OTHER REASON THEY ARE NOT DOING LIKE THIS..

    IN BUSINESS THERE IS NOT HUMANITY. THIS IS THE REAL WORLD.

    SESHAN

    ReplyDelete
  4. யாராவது ஆ(ச)சானவாய் பொத்தி இருக்க சொன்னால் நல்லது.

    ReplyDelete