Sunday, October 2, 2016

ஒரு மனிதன், எத்தனை முகங்கள். . .

நேற்று எழுதியிருக்க வேண்டிய பதிவு. 

எங்கள் தோழர் சாய் ஜெயராமன், நடிகர் திலகம் பற்றி எழுதிய பதிவில் நவராத்திரி படத்தைக் குறிப்பிட்டு அதிலே இறுதிக் காட்சியில் ஒவ்வொரு பாத்திரமும் சந்தனமும் கற்கண்டும் எடுத்துக் கொள்வதிலேயே நுணுக்கமான வேறுபாடு இருக்கும் என்று சொல்லியிருந்தார்.

ஆம், நம் காலத்தின் மகத்தான கலைஞன் என்பதை நினைத்து மீண்டும் ஒரு முறை மகிழ்ந்த தருணம் அது.

ஒன்பது பாத்திரங்களையும் ஒரே படத்தில் கொண்டு வர வேண்டும் என்று கொஞ்சம் முயன்றதன் விளைவுதான் கீழே உள்ள படம். இணையத்தில் இமேஜ் கோப்பாக இல்லாததால் யுடுயூபில் ஒவ்வொரு காட்சியாக சேமித்து எடுத்தது. 



நவராத்திரி முடிந்ததும் திருவிளையாடல். அப்படம் கீழே.



நேரம் கிடைக்கும் போது திருவருட்செல்வர், திருமால் பெருமை என்று ஒரே படத்திலேயே பல முகங்களை பார்த்து பதிவு செய்ய வேண்டும். 

1 comment:

  1. சிவாஜி
    காலத்தால் அழியாத காவியம்
    மகா காவியம்

    ReplyDelete