Wednesday, October 26, 2016

இவனுக்கு வெறும் ஆயுள் தண்டனைதான்




நேற்று தோழர் சம்சுதீன் ஹீராவின் பதிவை பகிர்ந்து கொண்டேன். அதிலே கௌசர் பானுவின் கொடூரக் கொலை பற்றி அவர் எழுதி இருந்தார். அக்கொலை தொடர்பாக இணையத்தில் தேடியபோது அக்கொலையை நிகழ்த்திய பாபு பஜ்ரங்கியோடு டெஹல்கா எடுத்த பேட்டியின் காணொளியை பார்க்க முடிந்தது.  



மேலே உள்ள படத்தில் இருப்பதுதான் பாபு பஜ்ரங்கி.

கௌசர் பானுவை கொன்ற சாதனையை டெஹல்காவிடம் அவன் பீற்றிக் கொண்டான்.  அவன் பேசிய வேறு சில விஷயங்களை கீழே கொடுத்துள்ளேன். 

We didn't spare a single Muslim shop, we set everything on fire … we hacked, burned, set on fire … we believe in setting them on fire because these bastards don't want to be cremated, they're afraid of it … I have just one last wish … let me be sentenced to death … I don't care if I'm hanged ... just give me two days before my hanging and I will go and have a field day in Juhapura where seven or eight lakhs [seven or eight hundred thousand] of these people stay ... I will finish them off … let a few more of them die ... at least 25,000 to 50,000 should die.

நாங்கள் ஒரு முஸ்லீம் கடையைக் கூட விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் கொளுத்தினோம்.  வெட்டினோம், எரித்தோம், தீயிட்டு கொளுத்தினோம், அந்த தே.... மகன்கள் இறந்து போனதற்குப் பிறகு எரியூட்டுவதை விரும்ப மாட்டார்கள், அஞ்சுவார்கள் என்பதாலாயே அவர்களை தீயிலிட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். எனக்கு ஒரு இறுதி ஆசை உண்டு. எனக்கு மரண தண்டனை அளியுங்கள். தூக்கில் போடுவது பற்றி எனக்கு கவலையில்லை. தூக்கில் போடும் முன் எனக்கு இரண்டு நாட்கள் கொடுங்கள். அவர்கள் ஏழு அல்லது எட்டு லட்சம் பேர் இருக்கும் ஜுஹாபுரா விற்குச் சென்று என் வேலையைக் காண்பிப்பேன். அவர்களில் இன்னும் பல பேர் சாகட்டும். குறைந்த பட்சம் 25,000 லிருந்து 50,000 பேர் வரையாவது கொல்லப்பட வேண்டும். 

இவ்வளவு கொடூரமானவனுக்கு வெறும் ஆயுள் தண்டனைதான் கொடுக்கப்பட்டது என்பது இன்னும் ஒரு கொடுமை.

No comments:

Post a Comment