Monday, October 17, 2016

தமிழ் ரத்னா சுனாசானா! வெட்கக்கேடு

நேற்று நண்பர் திரு விசுawsome அவர்களின் வலைப்பக்கத்திற்கு சென்றபோதுதான் இந்த வெட்கக்கேடான நிகழ்ச்சி பற்றி அறிந்து கொண்டேன்.

அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் என்ற ஒரு அமைப்பு சர்வதேச அரசியல் தரகன் சுப்ரமணியசாமிக்கு "தமிழ் ரத்னா" என்றொரு விருது கொடுத்துள்ளது. மன்னிக்கவும் அது "Tamil Ratna".

"பொறுக்கி" என்று கூட ஒழுங்காக சொல்ல முடியாமல்   "பொர்க்கி" என்று சொல்கிற இந்த மனிதனுக்கு எதற்கய்யா Tamil Ratna விருது என்று பார்த்தால் ஆங்கிலத்தில் உள்ள அந்த பட்டயத்தில் உலகத் தமிழர்களுக்கு சேவை செய்ததற்காக விருது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.



அந்த விருதையும் கொஞ்சம் கவனியுங்கள், விருது விழாவின் பேனரையும் கவனியுங்கள். எல்லாம் ஆங்கிலத்தில்தான் உள்ளது. அந்த விழா முழுதுமே ஆங்கிலத்தில்தான் நடந்ததாக நண்பர் விசு அவர்களின் பதிவு சொல்கிறது.

தமிழே இல்லாமல் ஒரு தமிழ்ச்சங்கம். என்ன கொடுமை பாருங்கள்.

சுனா சாமிக்கு எதற்கு விருது என்று இணையத்தில் இன்னும் கொஞ்சம் தேடிப் பார்த்தேன். 

சேது சமுத்திரத் திட்டத்தை அமலாகாமல் தடுத்து நிறுத்தியதற்காக இந்த விருதாம்.

தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான ஒரு திட்டத்தை நாசமாக்கி ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டதற்காக ஒரு விருது கொடுக்கிறார்கள் என்றால் இதை விட கேவலமான ஒன்று எதுவுமில்லை.

சுனா சாமிக்கு விருது கொடுப்பவர்களும் அவரைப் போலத்தானே இருப்பார்கள்!!!!!!!!!!!! 

1 comment:

  1. விடுங்க .. அரசியலில் இது எல்லாம் சகஜம் நண்பரே!

    ReplyDelete