Tuesday, October 25, 2016

குடத்தால் (அம்மாவால்) போன உயிர்




தமிழகத்தின் முதலமைச்சர் முழுமையாக குணமாகி வர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. 

மருத்துவர்களை மட்டும் நம்பாமல் கடவுளின் மீதும் அதிமுககாரர்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருப்பதிலும் தவறில்லை.

கோயில் கோயிலாக செல்லட்டும். என்னென்ன பிரார்த்தனைகள், வேண்டுதல்களை விரும்புகிறார்களோ அதைச் செய்யட்டும்.

ஆனால் அப்படிச் செய்கிற போது அதனால் அப்பாவி உயிர்கள் பலியாகாமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கட்சிக்காரர்கள் நடத்துகிற பிரார்த்தனை திருவிழாக்களில் அவர்களின் தலைவி குணமாக வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் உள்ளதா?

பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டி அவற்றை முறையாக பதிவு செய்து அதன் மூலம் அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதும் அடங்கியிருக்கிறதல்லவா?

உங்களின் நோக்கம் பிரார்த்தனை மட்டுமே என்றால் ஐயாயிரம் பால் குடம், இருபதாயிரம் பால் குடம் என்றெல்லாம் இலக்கு நிர்ணயிக்கும் அவசியம் என்ன?

ஒரே ஒருவர் மட்டும் மனமுருகி வணங்கினால்  போதாதா? 

சரி கட்சிக்காரர்கள் தானாக திரள்கிறார்களா? பால் குடம் எடுக்க வருபவர்கள் அந்த எவர்சில்வர் குடத்தை அப்படியே எடுத்துச் செல்லலாம் என்று ஆசை காட்டுகிறீர்கள்?

குடத்தைத்தவிர சேலை, பணம் என்றெல்லாம் ஆசை காட்டப் படுகிறதே!

தேர்தலில் வோட்டு வாங்க பணம் கொடுப்பது போல உங்களின் பிரார்த்தனை திருவிழாக்களுக்கும் பணம் கொடுத்துத்தானே ஆட்களை திரட்டுகிறீர்கள்?

உங்களின் தலைவியின் உடல் நலனை விட உங்களின் அரசியல் ஆசை மேலோங்கியிருப்பதால்தான் "எப்படியாவது நற்பெயர்" வாங்க முயல்கிறீர்கள். 

இலவசங்களுக்கு ஆசைப்பட்டு திரள்பவர்களை ஒழுங்கு படுத்தவும் ஒரு ஏற்பாடும் கிடையாது. 

அந்த அரசியல் பேராசைக்கு திருவண்ணாமலையில் கமலாம்மா என்பவரை காவு கொடுத்து விட்டீர்கள்.

முறைப்படி அனுமதி வாங்காதது, தகவல் சொல்லாதது அதிமுகவினர். 

ஆனால் போலீஸ் ஆய்வாளர் இடை நீக்கம். 

தவறிழைத்த கட்சிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

அதிமுக நிர்வாகிகளே, உங்களின் பதவி ஆசைக்கு அப்பாவி மக்களை பலி வாங்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.  

1 comment: