எத்தனை முறை எத்தனை பேர் தலையில் தட்டி பிய்ந்து போன காலணியால் அடித்தாலும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் பெண்கள் மீது விஷத்தை கக்குகிற நச்சு மிருகம் என்பதை ஜெயமோகன் மீண்டும் நிரூபித்துள்ளார்.
வங்கியில் காசாளராக பணி பார்க்கிற ஒரு பெண்மணி பற்றி இழிவாக வாந்தி எடுத்துள்ளார்.
தேவாங்கு, கிழவி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும், கீரையாவது ஒழுங்காக ஆய்வார்கள் போல என்று மனதில் தோன்றிய வக்கிரத்தையெல்லாம் பிதற்றியுள்ளார்.
அவரது இணையத்திற்கான இணைப்பு இங்கே
முதலில் அந்த வீடியோவே ஸ்லோ மோஷன் செய்யப்பட்டது போலத்தான் இருக்கிறது.
சரி, அப்படி அந்த பெண்மணி மெதுவாக வேலை செய்வதாகவே இருக்கட்டும், அந்த வீடியோவை பகிர்ந்து கொள்வது அநாகரீகம் இல்லையா?
திருட்டுத்தனமாக யாரோ வீடியோ எடுப்பார்கள், அதை இவரது எடுபிடிகள் இவருக்கு அனுப்பி கடிதம் அனுப்புவார்கள். இவரும் இதுதான் சாக்கு என்று ஒட்டுமொத்தமாக வங்கிகளில் பணி புரியும் வங்கி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள்.
அறம், அறம் என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கும் மனிதம் அறம் இதுதான்.
வங்கிகளின் பணிச்சுமை பற்றி இவருக்குத் தெரியுமா?
பணி நேரத்திற்கு மேல் கூடுதலாக எவ்வளவு நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும் என்பது தெரியுமா?
தனியார் கணினி நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற கம்ப்யூட்டர்களும் அவர்கள் எழுதித்தருகிற மென் பொருள்களும் பல சமயம் உயிரை வாங்கும் என்பது பற்றி தெரியுமா?
அவசரம் அவசரமாக பணத்தை வாங்கிப் போட்டு அதிலே கள்ள நோட்டு இருந்தால் இவர் இழப்பீடு தருவாரா?
கடைநிலை ஊழியராக பணியில் சேர்ந்து புதிதாக பதவி உயர்வு பெற்றவராகவோ, அல்லது அன்றைய தினம் உடல் உபாதையால் பாதிக்கப் பட்டு விடுப்பு மறுக்கப்பட்டவராகக் கூட அவர் இருக்கலாம்.
அவரது மனைவி கூட தொலைபேசி ஊழியர் என்றுதான் நினைக்கிறேன். பெண்களுக்கான உடல் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.
இதுதான் அரசு வங்கிகளின் நிலைமை என்றால் என்ன எழவிற்கு அங்கே கணக்கு வைத்திருக்கிறீர்கள்? தனியார் வங்கிக்கு அவரோ, அவரது எடுபிடியோ மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே!
கடைசியில் சோஷலிசம் என்று கொண்டு வந்து முடிக்கிறாரே, அங்கேதான் காவி வேட்டி கட்டிய ஆசான் நிற்கிறார்.
தொலைபேசித்துறையில் ஓசிச்சம்பளம் வாங்கிக் கொண்டு கதைகள், கட்டுரைகள் எழுதிய ஜெயமோகனுக்கு அடுத்தவரைப் பற்றியெல்லாம் குறை கூறுவதுதான் அறம் போல.
திருந்தாத ஜென்மம் என்று ஒதுங்கிப் போய் விடக்கூடாது.
வங்கி ஊழியர் இயக்கங்கள், மகளிர் அமைப்புக்கள் எல்லோரும் இவருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். எதிர்வினை கடுமையாக இருக்க வேண்டும்.
Exactly. Loosu pasanga thozhar!
ReplyDeleteexactly said
ReplyDeletetelephone,LIC,Bank
are same thozhar
சொல்ல வருவதை புரியும் படி சொல்லுங்கள். அனானியாக இருப்பதால் ஜெமோ பாணியில் பேசுவது போல தோன்றுகிறது
Deleteஎழுத்தாளர் ஜெயமோகன், மெதுவாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு வங்கிப் பணியாளரின் வீடியோவைப் போட்டு அதுகுறித்து ‘தேவாங்கு’ எனும் பெயரில் ஒரு பதிவை எழுதியிருந்தார். இதுகுறித்து டைம்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அது பரவலாகப் பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன், வங்கிப் பணியாளரை தேவாங்கு என்றும் ஒருமையில் விளித்து எழுதியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ReplyDeleteஇந்நிலையில், அந்த வங்கிப் பணியாளர் குறித்து, தற்போது தகவல் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் பிரேமலதா ஷிண்டே என்றும் அவர் பக்கவாதத்தாலும் இருமுறை ஹார்ட் அட்டாக்காலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. தன்னுடைய விடுப்பு காலம் அனைத்தும் சிகிச்சைக்காக முடிந்துவிட்டநிலையில், அவர் வேறு வழியின்றி வங்கிப் பணிக்குத் திரும்பியதாகவும் பிப்ரவரி 2017-ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் அதுவரை வங்கிக்கு வந்துபோக வங்கித் தலைமை உதவி செய்திருப்பதாகவும் தெரிகிறது. கணவர் இறந்துவிட்ட நிலையில், பிரேமலதா தன்னுடைய சிகிச்சைக்காக பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்.
பிரேமலதா மெதுவாக பணிபுரிவதால் அதை ஈடுகட்டும்விதமாக வங்கி மற்றொரு கவுண்டரை திறந்துவைத்துள்ளது. இதை அறியாமல் ஏதோ பொதுத் துறை வங்கி ஊழியர்களே மெத்தனமாக இருப்பதாக காட்ட இந்த வீடியோவை எடுத்து போட்டிருக்கிறார் ஹர்ஷ்த் கோட்கே என்பவர்.
எழுத்தாளர் ஜெயமோகன், ‘தேவாங்கு’ என்ற பதிவை நீக்கியிருக்கிறார்.
(நன்றி: thetimestami)
ஆமாம் சார். இத்தகவல்களை இப்போதுதான் எழுதினேன்
Deleteயாராவது ஆ(ச)சானவாய் பொத்தி இருக்க சொன்னால் நல்லது.
ReplyDelete