Saturday, October 15, 2016

முதல்வருக்காக காத்திருக்கையில் . . .




ஒரு முக்கியமான நிகழ்ச்சி. முதலமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தது. அவர் வருவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது. சரி ஒரு டீ குடித்து விட்டு வரலாம் என்று அரங்கிற்கு வெளியே வந்து டீ குடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம். பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் போனதை கவனிக்கவில்லை. என்னாச்சு இன்னுமா முதலமைச்சர் வரவில்லை, அவர் எப்போது வந்து எப்போது கூட்டத்தை ஆரம்பித்து எப்போது கூட்டத்தை முடிப்பார்கள் என்று என்னத்த கண்ணையா பாணியில் அலுத்துக் கொண்ட போது டீக்கடைக்காரர் சொன்னார்.

சி.எம் வந்து பத்து நிமிஷமாச்சு

என்னங்க சொல்றீங்க?

பைலட் வண்டி வரலை, பெரிய பெரிய காரெல்லாம் படையா கிளம்பி வரல, டிராபிக்கையெல்லாம் நிறுத்தலை.

ஒரு அம்பாசடர் கார் ஒன்னு போச்சுல்ல, அதிலதான் சி.எம் வந்தாரு.

அலறியடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறோம். மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சரை அப்போதுதான் பேசக் கூப்பிடுகிறார்கள்.

ஆடம்பரமும் ஆரவாரமும் இல்லாமல் வந்த சுவடே தெரியாமல் அமைதியாகவும் எளிமையாய் வந்தார் ஒரு முதலமைச்சர்!!!

ஆனால் அது தமிழகத்தில் அல்ல, கேரளாவில்

சம்பவம் நடைபெற்றது 1998 ம் வருடம்.

இடம் கோட்டயம்

நிகழ்ச்சி : தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 25 வது பொது மாநாடு

இதோ இவர்தான் அந்த முதலமைச்சர்.

நிஜமான மக்கள் முதல்வர்

தோழர் இ.கே.நயனார், 

தயவு செய்து அவசியம் பின் குறிப்பை படித்து விடுங்கள்.

அம்மாநாட்டின் போது எடுக்கப்பட்ட இரு புகைப்படங்கள் கீழே






பின் குறிப்பு : கேரள மாநில முதல்வர் பற்றி எழுதியதற்காக எல்லாம் தமிழக காவல்துறை கைது செய்யாதல்லவா?

1 comment:

  1. சி.எம் சொன்னாலே அரெஸ்டுதான். வார்டன்னா அடிப்போம்

    ReplyDelete