இந்தியாவிற்கு எதிராக செயல்படும் சீன நாட்டு பட்டாசுக்களை வாங்க வேண்டாம் என்று விவேக் சொன்னதாக ஒரு செய்தி சமூக வலைத் தளங்களில் உலவுகிறது.
அது அவர் சொன்னதா என்று தெரியவில்லை. தான் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று மறுக்கவும் இல்லை.
அதனால் ஒரு சின்ன கேள்வி.
உங்கள் எதிர்ப்பு சீனப் பட்டாசுக்களுக்கு மட்டுமா அல்லது அனைத்து பொருட்களுக்குமா?
கீழே உள்ளது என்னவென்று தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி விளம்பர தூதுவராக செயல்படும் "ஜியோ" தொலைபேசி.
அவை சீனத் தயாரிப்புதான். அம்பானி சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறார்.
அதனையும் புறக்கணிக்குமாறு நீங்கள் வேண்டுகோள் விடுப்பீர்களா?
செய்வீர்கள் என்றே நம்புகிறேன்.
பின் குறிப்பு : இந்திய சிறு தொழில்களைப் பாதுகாக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ய தடை இருந்தது. உலகமயம், சர்வதேச வர்த்தக அமைப்பு உடன்பாடு என்ற பெயர்களில் அந்த தடையை வாஜ்பாய் அரசுதான் நீக்கியது.
இந்தியப் பொருளாதாரத்தை, இந்திய உற்பத்தியை, இந்திய சிறு தொழிலை பாதுகாக்க மீண்டும் அப்படி ஒரு தடை வேண்டும். கொக்கைப் பிடிக்க அதன் தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கொக்கின் கண்களை மூடும் வரை காத்திருக்காமல் ஒரு துளி மையில் ஒரு ஆணை பிறப்பித்தால் போதுமானது. மோடிக்கு அதற்கான அதிகாரம் உண்டு.
அதை செய்யச் சொல்லலாமே விவேக் . . . .
7800 க்கும் மேல் வருகிறதாம் சீனப்பொருட்கள்..
ReplyDeleteமிக கவனமாகவும்,விரைந்தும் முடிவெடுக்க வேண்டும் தோழர்...
there are many evils still in existence...
ReplyDeleteall people should raise a firm voice over those things
not only actor vivek...